Sweetcorn Chicken soup : சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்!
வழக்கமாக செய்யும் சிக்கன் சூப்பில் சற்று மாறுதலாக ஸ்வீட் கார்னையும் சேர்த்து செய்வதால், சூப்பின் சுவை கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் ருசியாகவும் இருக்கும்.
வழக்கமாக நாம் வீட்டில் செய்கின்ற சிக்கன் சூப், மட்டன் சூப்பிற்கு மாற்றாக ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்பை செய்து பாருங்கள். மணமும், சுவையும் வேற லெவலாக இருக்கும். இதனை நம் வீட்டில் ஒரு முறை செய்து கொடுத்தால் அனைவரும் இதனை அடிக்கடி செய்து தருமாறு கேட்பார்கள்.
வழக்கமாக செய்யும் சிக்கன் சூப்பில் சிக்கன், செலரி மற்றும் வெங்காயம் சேர்த்து செய்வோம். இன்று சற்று மாறுதலாக ஸ்வீட் கார்னையும் சேர்த்து செய்வதால், சூப்பின் சுவை கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் ருசியாகவும் இருக்கும். சரிங்க ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் செய்ய தேவையான பொருட்கள்:
Madurai Kari Dosa : மணக்கும் மதுரை கறி தோசை!
சோள விதைகள்- 1 1/2 கப்
சிக்கன்-250 கிராம்
முட்டை-1
கேரட்-2
செலரி-2
பூண்டு பல்-3
பெரிய வெங்காயம்-1
சோள மாவு- 2 ஸ்பூன்
மிளகு- 1ஸ்பூன்
மிளகு தூள் -தேவையான அளவு
ஸ்ப்ரிங் ஆனியன் -தேவையான அளவு
பட்டர் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக அலசி கொள்ள வேண்டும். பின்பு கேரட், வெங்காயம், செலரி, ஸ்ப்ரிங் ஆனியன் ஆகியவற்றை நறுக்கி பொடியாக நறுக்கி வைத்து, பூண்டு மற்றும் மிளகை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் விலாசமான பாத்திரத்தை மிதமான தீயில் வைத்த பின், அதில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்த பின், சிக்கனை போட்டு வேக வைக்க வேண்டும்.
அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், வெங்காயம் மற்றும் செலரியை போட்டு நன்றாக கலந்து விட்டு , பின் இடித்து வைத்துள்ள மிளகு , பூண்டு மற்றும் உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி போட்டு அதை 45 நிமிடங்களுக்கு வேக விடவும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு,அதிலுள்ள சிக்கன் பீஸ்களை எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும். பிறகு அந்த சிக்கன் ஸ்டாக்கை (வேக வைத்த நீர்) வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் சோள விதைகளை போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அதை ஒரு நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். இப்பொழுது ஒரு பானில் சிறிது பட்டர் சேர்த்து மிதமான சூட்டில் பட்டர் உருகிய பின் ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் 2 கையளவு முழு சோள விதைகள் மற்றும் அரைத்து வைத்துள்ள சோள விதைகளை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, அதனுடன் சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக செய்து இதில் சேர்த்து அதை நன்கு மிக்ஸ் செய்து விடவேண்டும்.
கசப்பில்லாமல் பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?
பின் இதில் சிக்கன் ஸ்டாக்கை சேர்த்து அதை கொதிக்க வைத்து, கொஞ்சம் கெட்டியாக மாற சிறிது சோள மாவில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து ,அதில் ஊற்றி, பின் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து அதை 10 நிமிடங்கள் வேக விட வேண்டும். பிறகு முட்டை ஒன்றை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்துசூப்பில் சிறிது சிறிதாக சேர்த்து மிக்ஸ் செய்து விட வேண்டும்.
இறுதியாக நறுக்கி வைத்துள்ள ஸ்ப்ரிங் ஆனியன் தூவி ஒரு முறை கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி கொண்டு ஒரு கப்பில் ஊற்றினால் மணமும், சுவையும் கொணட ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் ரெடி!