டின்னருக்கு இப்படி கைமா வெஜ் சப்பாத்தி செய்ங்க! எவ்ளோ செய்தாலும் டக்குனு எல்லாமே காலி ஆகி விடும் !

வாருங்கள்! ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வெஜ் கைமா சப்பாத்தி வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Kaima Veg Chapati in Tamil

இன்று இரவு டின்னருக்கு ஏதேனும் ஸ்பெஷலாக செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த ரெசிபியை செய்து கொடுங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் வித்தியாசமான சுவையில் விருந்தளிக்கும் விதமாக இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

வழக்கமாக டின்னர் எனில் சப்பாத்தியும், பரோட்டாவும் முக்கிய இடத்தை பிடிக்கும் . ஆனால் அதனையே மீண்டும் மீண்டும் செய்து கொடுத்தால் அனைவருக்கும் போர் தான் அடிக்கும். ஆகவே இன்று சற்று வித்தியாசமான சுவையில் வெஜ் கைமா சப்பாத்தி ரெசிபியை செய்து கொடுங்க.

வாருங்கள்! ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வெஜ் கைமா சப்பாத்தி வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பெரிய சப்பாத்தி - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 ஸ்பூன்
கேரட்- 1/2
பீன்ஸ்- 3
முட்டைக்கோஸ்-50 கிராம் குடைமிளகாய், பட்டாணி)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மல்லித்தழை-கையளவு

அரைப்பதற்கு:

முந்திரி-6
வெங்காயம் - 1/2
சிறிய தக்காளி - 1
கசகசா - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 2 ஸ்பூன்

தாளிக்க :

சோம்பு - 1/2 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கல்பாசி - 1
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே போன்று கேரட்,பீன்ஸ்,கோஸ் மற்றும் கேப்ஸிகம் ஆகிய காய்கறிகளை பொடியாக அரிந்து அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் வெங்காயம்,தக்காளி ஆகியவை சேர்த்து முந்திரி மற்றும் கசகசாவை சேர்த்து வதக்கி விட வேண்டும்.

பின் அதில் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறி விட்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆறிய பிறகு, அதனை மிக்சி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சாப்பத்திகளை பிய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் 1 வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் சப்பாத்திகளை சேர்த்து கொஞ்சம் வதக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின், சோம்பு, கிராம்பு,ஏலக்காய், பட்டை,கல்பாசி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து விட்டு பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.

அனைத்தும் வதங்கிய பின்னர், காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு பின் அதில் அரைத்த மசாலா சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை அடுப்பி தீயினை சிம்மில் வைத்து வேக விட வேண்டும் . காய்கறிகள் வெந்த பின் மசாலா சேர்ந்த பின் சப்பாத்திகளை சேர்த்து கிளறி விட்டு,மல்லித்தழை தூவி இறக்கினால் வெஜ் கைமா சப்பாத்தி ரெடி!

கோதுமை மாவு வைத்து சப்பாத்தி தான் செய்யணுமா என்ன? சத்தான இடியாப்பம் கூட செய்யலாம் தெரியுமா ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios