Asianet News TamilAsianet News Tamil

கோதுமை மாவு வைத்து சப்பாத்தி தான் செய்யணுமா என்ன? சத்தான இடியாப்பம் கூட செய்யலாம் தெரியுமா ?

வாருங்கள்! ருசியான கோதுமை மாவு இடியப்பம் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையக செய்வது என்பர் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Wheat Flour Idiyappam Recipe in Tamil
Author
First Published Apr 21, 2023, 3:33 PM IST | Last Updated Apr 21, 2023, 3:33 PM IST

தென் தமிழகத்தை பொறுத்தவரை இட்லி, தோசை ஆகியவற்றை தவிர்க்க முடியாத உணவுகள் என்றே கூற வேண்டும். சிறு குழந்தைகள், வயதானவர்கள், உடல் நலம் சரி இலலதவர்கள், கர்பிணி பெண்கள் என்று அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவாக தான் இட்லி,தோசை உள்ளன. இதற்கு மாற்றாக ஏதேனும் உள்ளதா என்று கேட்கும் போது இடியாப்பத்தை கூறலாம்.


இடியாப்பமும் இட்லி போன்று மிகவும் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவு தவிர இடியை போன்றே அதனையும் ஆவி மூலமாக வேக வைப்பதால் இதனையும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் ஏற்ற உணவாகும். என்ன தான் இது சுவையாக இருந்தாலும் இடியாப்பத்தை செய்ய ஒரு சிலர் சிரமப்படுவதால் பெரும்பாலோனர் அடிக்கடி செய்து சாப்பிட தயங்குவார்கள்.


நம்மில் பலரும் இடியாப்பம் என்றவுடன் அதனை அரிசி மாவில் தான் செய்து சாப்பிட்டுருப்போம். ஆனால் இன்று நாம் கோதுமை மாவு வைத்து இடியாப்பம் செய்ய உள்ளோம்.என்ன? கோதுமை மாவில் இடியாப்பமா என்று கேட்கறீர்களா? ஆமாங்க கோதுமை மாவு வைத்து சுவையான இடியாப்பம் கூட செய்யலாம். இதன் சுவை ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்.

வாருங்கள்! ருசியான கோதுமை மாவு இடியப்பம் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையக செய்வது என்பர் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு-1 கப்
உப்பு-தேவையான அளவு
தேங்காய் துருவல்- 1/2 முடி
சர்க்கரை -தேவையான அளவு

செய்முறை:

முதலில் கோதுமை மாவை ஒரு பெரிய தட்டில் எடுத்துக் கொண்டு சிறிது உப்பு தூவி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதி வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சிறுக சிறுக ஊற்றி இலகுவாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மாவினை 10 நிமிடங்கள் வரை ஊர வைத்து கொள்ள வேண்டும். பின் முறுக்கு பிழியும் அச்சு துடுது அதன் உட்புறம் முழுவதும் சிறிது எண்ணெய் தடவி இந்த கோதுமை மாவினை வைத்து இட்லி தட்டுகளின் மீது பிழிந்து விட வேண்டும்.

பின் அடுப்பில் இந்த இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்த பின்னர் இட்லி தட்டுகளை வைத்து வேக விட வேண்டும். 10 நிமிடங்களுக்குள் இடியாப்பம் வெந்து விடும். பின் அதனை இறக்கி விட்டு சூடாக இருக்கும் போதே அதன் மேல் சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் தூவி சாப்பிட்டால் தேவாமிர்தமாகா இருக்கும்.

எப்போதும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டு போரிங்கா? அப்போ வெண்டைக்காய் வைத்து மொறுமொறுன்னு சிப்ஸ் பண்ணுங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios