காதலர் தின ஸ்பெஷல் : “ஜெல்லி கேக்" செய்து நமது பிரியத்தை வெளிப்படுத்தலாம் வாங்க!

வாருங்கள்! காதலர் தினத்தன்று ஸ்பெஷல் ஜெல்லி கேக் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Jelly Cake Recipe in Tamil

காதலர் தினத்தன்று நமது பிரியமானவர்களிடம் நமது அன்பை வெளிகாட்ட ஒரு நல்ல சந்தர்ப்பம். நமது பிரியத்தை உணவு மூலம் வெளிப்படுத்தலாம். அந்த உணவுகளை நாமே நம் கைகளால் சுவையாக செய்ய நேரம் ஒதுக்கி செய்வது , அவர்களுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என்பதை புரிய வைக்கலாம். இம்முறை காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் நாளில் புதிய சிறப்பான உணவு செய்ய யோசிக்கிறீர்கள் எனில் இந்த பதிவு உதவியாக இருக்கும். இன்று நாம் கேக் வகைகளில் ஒன்றான ஜெல்லி கேக் ரெசிபியை காண உள்ளோம்.


வாருங்கள்! காதலர் தினத்தன்று ஸ்பெஷல் ஜெல்லி கேக் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்:

  • மைதா - 1 1/4 கப்
  • பால் - 1/2 கப்
  • சர்க்கரை - 1/2 கப்
  • பட்டர் -150 கிராம்
  • முட்டை - 1
  • வென்னிலா எசன்ஸ் - 2 ஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் - 1 .5 ஸ்பூன்
  • உப்பு - 1 சிட்டிகை


டாப்பிங் செய்வதற்கு:

ஜெல்லி பாக்கெட் - 1
தேங்காய் பொடி - 2 கப்

இனி பெட் காஃபிக்கு நன்மையும்,ஆரோக்கியமும் நிறைந்த கருப்பட்டி காஃபி குடிங்க!

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி ஜெல்லிகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் ஜெல்லி பொடியைப் போட்டு அதில் சூடான தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி, ஃப்ரிட்ஜினுள் வைத்து குளிர வைக்க வேண்டும். ஜெல்லி கெட்டியாகாமல் இருப்பதற்கு கொஞ்சம் அதிகமாக தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மைக்ரோ ஓவனை 180 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் நான்-ஸ்டிக் மாஃபின் பானில் சிறிது பட்டர் சேர்த்து ஸ்ப்ரெட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பௌலில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். மற்றொரு பௌலில் பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் முட்டையை உடைத்து ஊற்றி பீட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மைதா கலவையையம், பாலையும் கொஞ்சம் கொஞ்சமாக பட்டர் கலவையில் சேர்த்து கட்டிகள் ஏற்படாதவாறு கிளறி வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இதனை மஃபின் பானில் வைத்து, மைக்ரோ ஓவனில் வைத்து சுமார் 20 நிமிடங்கள் வரை பேக் செய்து இறக்கி, ஒரு தட்டில் தனியாக எடுத்த வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த மஃபினை குளிர்ந்த ஜெல்லி நீரில் டிப் எடுத்து, தேங்காய் பொடியை தூவினால் எடுத்தால் ஜெல்லி கேக் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios