Asianet News TamilAsianet News Tamil

தித்திக்கும் ''ஜிலேபி'' சுவையா..! ஈசியா...! வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

வழக்கமாக வீட்டின் விஷேஷ தினங்களில் மற்றும் பண்டிகை காலங்களில் ஜிலேபியை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்போம். வாருங்கள் இன்று சூப்பரான ஜிலேபியை சுவையாகவும் எளிமையாகவும் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Jalebi In Tamil
Author
First Published Dec 6, 2022, 2:23 PM IST

இனிப்பு வகைகளில் ஒன்றான ஜிலேபி வட இந்தியர்களின் பிரதான இனிப்பு வகையாக உள்ளது. வட இந்தியாவில் தோன்றினாலும் இப்போது நமது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஜிலேபி சுவைக்கு அடிமையானவர்கள் இருக்கின்றனர். 

இந்த ஜிலேபி மொறுமொறுவென மற்றும் மென்மையாகவும் இருக்கும். மேலும் இதனை வாயில் போட்டால் போதும்,அப்படியே ஜூஸியாக கரைந்து விடுவதாகவும் இருக்கும். சர்க்கரை பாகிணை மட்டும் சரியாக செய்து விட்டால் இதன் சுவை சூப்பராக இருக்கும். 

வழக்கமாக வீட்டின் விஷேஷ தினங்களில் மற்றும் பண்டிகை காலங்களில் ஜிலேபியை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்போம். வாருங்கள் இன்று சூப்பரான ஜிலேபியை சுவையாகவும் எளிமையாகவும் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 1 கப்
சக்கரை – 2 கப்
தயிர் – 3/4 கப்
கார்ன் பிளார் – 3 ஸ்பூன் 
நெய் –2 ஸ்பூன் 
புட் கலர் – சிறிதளவு 
பேக்கிங் பவுடர் – 1/4 ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு

கார்த்திகை ஸ்பெஷல்- பொரி உருண்டை நெய்வேத்தியம் செய்வோம் வாங்க!

செய்முறை:

முதலில் ஒரு பவுலில் மைதா மாவு, கார்ன் மாவு சேர்த்து கொண்டு நன்றாக கிளறி கொள்ள வேண்டும். பின் அந்த கலவையில் தயிர் மற்றும் நெய் சேர்த்து விட்டு மீண்டும் நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது மஞ்சள் அல்லது ஆரஞ் புட் கலர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவினை கரைத்துக் கொள்ள வேண்டும். 

இந்த மாவினை சுமார் 10 மணி நேரம் வரை புளிக்க வைத்துக் கொள்ள வேண்டும். 10 மணி நேரம் ஆன பிறகு, மாவினை எடுத்து அதில் சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சர்க்கரை சேர்த்து பின் தண்ணீர் ஊற்றிக் கொண்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொள்ள வேண்டும். அரை கம்பி பதத்திற்கு சர்க்கரை பாகு வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் ஊற்றி எண்ணெய் காய வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடான பின், கரைத்து வைத்துள்ள மாவினை கெட்ச் அப் பாட்டிலில் ஊற்றி கொண்டு கொதிக்கும் எண்ணெயில் ஜிலேபி வடிவில் ஊற்றி விட வேண்டும். 

இப்போது அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து, நன்றாக வேக விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஜிலேபியை எடுத்து சுமார் 30 நொடிகள் வரை சக்கரை பாகில் போட்டு ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதாங்க. சூப்பரான சுவையில் ஜிலேபி ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios