கார்த்திகை ஸ்பெஷல்- "பொரி உருண்டை" நெய்வேத்தியம் செய்வோம் வாங்க!
பொரி உருண்டையை பொதுவாக நாம் வெளியில் கடைகளில் வாங்கி சுவைத்து இருப்போம். இன்று அதனை நாம் வீட்டில் சுவையாகவும், எளிமையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நமது கலாச்சாரத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் செய்து கடவுளுக்கு படைத்து நெய்வேத்தியமாக வழங்குவோம். உதாரணமாக சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை , தசரா என்றால் சுண்டல் வகைகள், தை திருநாள் என்றால் சர்க்கரை பொங்கல்.அந்த வரிசையில் கார்த்திகை தினத்தன்று நாம் பொரி உருண்டை செய்து கடவுளுக்கு பிரசாதமாக படைத்து ஆசி பெறுவோம் வாங்க.
இந்த பொரி உருண்டையை பொதுவாக நாம் வெளியில் கடைகளில் வாங்கி சுவைத்து இருப்போம். இன்று அதனை நாம் வீட்டில் சுவையாகவும், எளிமையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பின்றி அனைவருக்கும் ஏற்ற ஒரு ஸ்னாக்ஸ் என்று கூறலாம். மேலும் இதனை குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும் போது ஸ்னாக்ஸ் பாக்ஸில் கூட வைத்து அனுப்பலாம். இதனை பக்குவமாக எடுத்து வைத்தால் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
தேவையானவை:
வெல்லம்-1/4 கிலோ
நெல் பொரி-1/ 2 கிலோ
நெய்-தேவையான அளவு
துருவிய தேங்காய்- 2ஸ்பூன்
தண்ணீர்- தேவையான அளவு
பாரம்பரிய முறையில் ''கம்பு அடை'' செய்யலாம் வாங்க!
செய்முறை:
முதலில் வெல்லத்தை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி விட வேண்டும். பின் அந்த பாத்திரத்தில் துருவிய வெல்லம் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் வெல்லம் கரைத்த பாத்திரத்தை வைத்து, காய்ச்ச வேண்டும். வெல்லம் நன்கு கரைந்து பாகு பதத்திற்கு வந்த பிறகு, அடுப்பை ஆஃப் செய்து விட்டு ,பாத்திரத்தை இறக்கி விட வேண்டும்.
அதில் உள்ள பாகினை ஒரு வடிகட்டி மூலம் மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். இப்போது இந்த பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள பொரி மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
அடுத்து நம் கைகளில் சிறிது நெய் தடவி,பொறி மற்றும் வெல்ல கலவையை (வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது) கொஞ்சம் கையில் எடுத்து ஒரே வடிவிலான உருண்டையாக பிடித்து கொள்ள வேண்டும்.இதே மாதிரி அனைத்தையும் உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதாங்க சுவையான பொரி உருண்டை ரெடி!
இதனை கார்த்திகை திருநாள் அன்று செய்து தெய்வத்திற்கு பிரசாதமாக படைத்து , தெய்வத்தின் அருளும் ஆசீர் வாதம் பெற்று சுபிட்சமாக வாழுங்கள்.