Asianet News TamilAsianet News Tamil

தைத்திருநாளாம் உழவர் திருநாளை தித்திப்பான "சர்க்கரை பொங்கல்" செய்து மகிழ்வோடு கொண்டாடலாம் வாங்க!

வாருங்கள்!ருசியான சர்க்கரைப் பொங்கலை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 

How to make Jaggery Pongal in this Pongal Festival
Author
First Published Jan 5, 2023, 3:44 PM IST

தமிழரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருநாள் வர இன்னும் சில தினங்களே உள்ளன.என்ன தான் பல வகையான துரித உணவுகள்,மேற்கத்திய உணவுகள் என்று வந்தாலும், பொங்கல் என்றால் நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல் தான்.

தைத் திருநாளாம் பொங்கல் அன்று பாரம்பரிய முறையில் தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்து குடும்பத்துடன் மகிழ்வோடு கொண்டாடலமா! .

வாருங்கள்!ருசியான சர்க்கரைப் பொங்கலை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
 

  • பச்சரிசி – 200 கிராம்
  • வெல்லம் - 200 கிராம்
  • பாசிப்பருப்பு –75 கிராம்
  • பால் – 250 மில்லி
  • ஏலக்காய் பொடி-1/2 ஸ்பூன்
  • பச்சை கற்பூரம்- 1 சிட்டிகை
  • உப்பு- 1 சிட்டிகை
  • நெய்-1/2 கப்
  • முந்திரி பருப்பு-1/4 கப்
  • உலர்ந்த திராட்சை-10
  • இனி வத்தல் போட கஞ்சி காய்ச்ச வேண்டாம்!


செய்முறை:

ஒரு பௌலி பச்சரிசி சேர்த்து அலசி விட்டு, 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் பாசிப்பருப்பு சேர்த்து தீயினை சிம்மில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பின் பருப்பினை தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு (மண்)பானை வைத்து அதில்1 கப் பால் மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்க வேண்டும்.பால் கொதித்து பொங்கும் பொழுது அரிசி மற்றும் பருப்பினை தண்ணீர் இல்லாமல் வடித்து அதில் சேர்க்க வேண்டும்.

1 பௌலில் துருவிய வெல்லம் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பானையில் உள்ள அரிசி மற்றும் பருப்பு வெந்த பிறகு அதில் வெல்ல பாகினை சேர்த்து கிளறி வேக வைக்க வேண்டும். பின் அதில் 1 1/4 கப் அளவு நெய் மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். 

பொங்கல் நன்கு வெந்த பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அடுப்பில் ஒரு பான் வைத்து நெய் சேர்த்து சூடானதும், 1/4 கப் முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின் அதில் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது சர்க்கரை பொங்கலில் வறுத்த முத்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கலந்து விட வேண்டும். இறுதியாக சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து கிளறினால் தித்திப்பான சர்க்கரை பொங்கல் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios