இனி வத்தல் போட கஞ்சி காய்ச்ச வேண்டாம்!

வத்தல் என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட வில்லை என்றாலும் இந்த வத்தலை மிச்சம் இலலாமல் சாப்பிடுவார்கள். எந்த ஒரு காய்கறியும் இல்லையா ? கவலையை விடுங்க இந்த வத்தல் போதும் .

How to make Aval Vathal pappad in Tamil


வத்தல் என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட வில்லை என்றாலும் இந்த வத்தலை மிச்சம் இலலாமல் சாப்பிடுவார்கள். எந்த ஒரு காய்கறியும் இல்லையா ? கவலையை விடுங்க இந்த வத்தல் போதும் .

பொதுவாக இது வெரைட்டி ரைஸ்க்கு நல்ல ஒரு சாய்ஸ்சாக இருக்கும். இந்த வத்தலுக்கு காய்க்கணும், பொங்கணும் என்று இல்லாமல் மேலும் அடுப்பே இல்லாமல் ரொம்பா சிம்பிளா, ஈஸியான வத்தல் ரெசிபி தான் இன்னைக்கு நாம பார்க்க போறோம் .சாப்பிட மிகவும் டேஸ்ட்டா , கிரிஸ்பியா இருக்கும் அவல் வத்தலை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.

காலை டிபனாக அவல் உணவுகளை சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். சரிங்க! இவ்வளவு நன்மைகள் உள்ள அவலை வைத்து வத்தல் செய்வது எப்படி ? பார்க்கலாம் வாங்க.

Fruit Desert : சமையல் அறைக்கு செல்லாமல் ஒரு ரெசிபி செய்வோமா?

தேவையான பொருட்கள்:

100 கிராம் கெட்டி அவல்

2 பச்சை மிளகாய்

1 ஸ்பூன் சீரகம்

தேவையான அளவு உப்பு

Semiya Puttu : சேமியா இருக்கா பத்தே நிமிடத்தில் காலை மாலை டிபன் ரெடி!

செய்முறை:

அவலை மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து , சல்லடையில் போட்டு சலித்துக் கொண்டு ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாய் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . அரைத்த அவல் மாவில் சிறிது உப்பு, சீரகம் , அரைத்த பச்சை மிளகாய் விழுதையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்திட வேண்டும். பின் சிறிது சிறிதாக நீர் சேர்த்து சப்பாத்தி மாவை போல பிசைந்துக் கொள்ள வேண்டும் .

மரவள்ளிக் கிழங்கு அடை செய்வது எப்படி?

இந்த மாவை 1/2 மணி நேரம் ஒரு கிண்ணத்தில் வைத்து மூடி போட்டு மூடி வைக்க வேண்டும். வத்தல் செய்ய ஒரு பெரிய ஒரு தட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் .பின் ஒரே ஒரு ஹோல் உள்ள முறுக்கு அச்சில் சிறிது மாவை வைத்து பிழிந்து கொள்ள வேண்டும். அனைத்து மாவினையும் இவ்வாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும் . இப்போது இதனை இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்தால் வத்தல் ரெடி!

சுமார் ஒரு வருடம் வரை இந்த வத்தலை உபயோகிக்கலாம்ங்க.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios