சூடான சாதத்தில் இந்த பொடி சேர்த்து சாப்பிடுங்க! வேறு எதையும் தேட மாட்டீர்கள்!

வாருங்கள்! ருசியான புளியோதரை பொடியை வீட்டில் மிக சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Instant Puliyogara Powder in Tamil

தினமும் சாம்பார், ரசம், பொரியல்,கூட்டு என்று செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் ஈஸியாக அதே நேரத்தில் சுவையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். 

இன்று நாம் சூப்பரான ஈஸியான ஒரு பொடி ரெசிபியை காண உள்ளோம். இந்த பொடியை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் தொட்டுக்கொள்ள எதுவும் கேட்க மாட்டார்கள். இந்த பொடியை பக்குவமாக எடுத்து வைத்தால் 3 மாதங்கள் வரை கூட உபயோகிக்கலாம். 

வாருங்கள்! ருசியான புளியோதரை பொடியை வீட்டில் மிக சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

புளி - 100 கிராம் 
வெல்லம் - 1/4 கப் 
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு

வறுப்பதற்கு :

நல்லெண்ணெய் - தேவையான அளவு 
உளுந்தம் பருப்பு - 1/2 கப் 
கடலைப்பருப்பு - 1/2 கப் 
தனியா விதை - 1/2 கப்
மிளகு - 2 ஸ்பூன் 
கருப்பு எள் - 1 ஸ்பூன் 
வெந்தயம் - 1 ஸ்பூன் 

குட்டிஸ்களுக்கு மிகவும் பிடித்த "முட்டை பாஸ்தா"! இந்த மாதிரி கொடுங்க.

தாளிப்பதற்கு: 

நல்லெண்ணய் - தேவையானஅளவு 
கடுகு - 1 ஸ்பூன் 
வேர்கடலை - 1/2 கப்
காய்ந்த மிளகாய்-5
கறிவேப்பிலை - 1/2 கப்

செய்முறை :

முதலில் வெல்லத்தை துருவி அல்லது பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் உளுந்தம் பருப்பு, மிளகு, எள்,கடலைப் பருப்பு, தனியா, வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக தனித் தனியே சேர்த்து வறுத்துஆற வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதே கடாயில் புளியை சேர்த்து (தீயினை சிம்மில் வைத்து) வறுத்து அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு , வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும் 

வறுத்து வைத்துள்ள கலவை ஆறிய பிறகு, மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொண்டு பின் அதில் பொடித்து வைத்துள்ள வெல்லம், வறுத்த புளி, பெருங்காயத் தூள்மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த பொடியில் தாளித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து எடுத்தால் சூப்பரான புளியோதரை மிக்ஸ் பொடி ரெடி!

இதனை காற்று புகாத டப்பாவில் மாற்றிக் கொண்டு, பிரிட்ஜில் வைத்தால் 3 மாதம் வரை கூட பயன்படுத்தலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios