Asianet News TamilAsianet News Tamil

குட்டிஸ்களுக்கு மிகவும் பிடித்த "முட்டை பாஸ்தா"! இந்த மாதிரி கொடுங்க

முட்டை கொத்து பாஸ்தாவை மிக குறைந்த நேரத்தில் , சுலபமாகவும் சுவையாகவும் செய்யலாம். வாருங்கள்! ருசியான முட்டை கொத்து எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Egg pasta in Tamil
Author
First Published Jan 3, 2023, 10:46 AM IST

குட்டிஸ்கள் எப்படி நூடுல்ஸை விரும்பி சாப்பிடுவார்களோ அதே அளவிற்கு அவர்கள் பாஸ்தாவையும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் விரும்பி சாப்பிடுகின்ற பாஸ்தாவை மேலும் கொஞ்சம் புதுமையன சுவையில் அதே நேரத்தில் ஆரோக்கியமாக செய்ய தெரியுமா?

பாஸ்தாவில் முட்டை சேர்த்து முட்டை கொத்து பாஸ்தா ரெசிபியை காணலாம். இதனை ஒரு முறை செய்து கொடுத்தால் இதனையே அடிக்கடி செய்து தரும்படி கேட்பார்கள்.  இந்த முட்டை கொத்து பாஸ்தாவை மிக குறைந்த நேரத்தில் , சுலபமாகவும் சுவையாகவும் செய்யலாம். வாருங்கள்! ருசியான முட்டை கொத்து எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

முட்டை - 3
பாஸ்தா - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 5 பற்கள்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தழை- கையளவு 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

அடுப்பு இல்லாமல் ஒரு ரெசிபியை செய்யலாமா - "பேல் பூரி"!

செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் பூண்டினை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று தக்காளி, மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பாஸ்தாவை தண்ணீரில் சாஃப்ட்டாக வேக வைத்துக் கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி க் கொண்டு , எண்ணெய் சூடான பிறகு சீரகம் சேர்த்து தாளித்துக் கொண்டு பின் பொடியாக அரிந்த பூண்டினை சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட்டு பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி விட வேண்டும். 

தக்காளி நன்கு மசிந்த பிறகு, அதில் கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து அதன் கார வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். இப்போது முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விட வேண்டும். முட்டை நன்கு வெந்து பொரியல் போன்று உதிரியான பின் அதில் வேக வைத்து எடுத்துள்ள பாஸ்தாவை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் நன்கு கிளறி விட வேண்டும். 

பின் இறுதியாக பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி இறக்கி, பரிமாறினால் ருசியான முட்டை கொத்து பாஸ்தா ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios