சுவையான இட்லி டிக்கா செய்யலாமா!

வாருங்கள் ! ருசியான இட்லி டிக்கா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் கொள்ளலாம்.

How to make Idly Tikka Recipe in Tamil

இன்றைய சுட்டிக் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி எப்போதும் வித்தியாசமான ரெசிபிக்களை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். தினமும் இட்லி,தோசை போன்றவற்றை செய்து தருவதால் அவர்கள் அவைகளை சாப்பிட தயக்கம் காட்டுகிறார்கள். அதே இட்லியை அவர்கள் விரும்பும் படி இப்படி செய்து கொடுத்தால் வேண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

இட்லியில் சில்லி இட்லி, பொடி இட்லி, மசாலா இட்லி, ஃப்ரைட் இட்லி என்று பல வெரைட்டிகள் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் புதுமையாக இட்லி ரெசிபியை காண உள்ளோம். இட்லியில் என்ன புதுமை என்று யோசிக்கிறீர்களா? இட்லி டிக்கா ரெசிபியை தான் நாம் காண உள்ளோம். பன்னீர் டிக்கா, சிக்கன் டிக்கா போன்றவைகளை சுவைத்து இருப்போம். அந்த வரிசையில் இன்று இட்லி டிக்கா ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை பிடிக்காது என்று எவரும் சொல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வாருங்கள் ! ருசியான இட்லி டிக்கா ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  • இட்லி - 2
  • வெங்காயம்-1
  • சிவப்பு கேப்ஸிகம் - 1
  • மஞ்சள் கேப்ஸிகம்- 1
  • இட்லி மிளகாய்ப் பொடி - 2 ஸ்பூன்
  • கார்ன் பிளார்-2 ஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு
  • டூத்பிக் -தேவையான அளவு

இனி பெட் காஃபிக்கு நன்மையும்,ஆரோக்கியமும் நிறைந்த கருப்பட்டி காஃபி குடிங்க!

செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் கேப்ஸிகத்தை ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இட்லிகளை ஒரே அளவில் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பவுலில் இட்லி துண்டுகளை சேர்த்து அதில் கார்ன் பிளார் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் இட்லிகளை போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொரித்த இட்லிகளின் மேல் இட்லி மிளகாய்ப் பொடிகளை தூவி அனைத்து பக்கங்களிலும் நன்றாக பிரட்டி விட வேண்டும். 

 
அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் கியூப் வடிவத்தில் அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் கேப்ஸிகம்களை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட்டு சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். இப்போது டூத்பிக்கில் இட்லி,வெங்காயம்,கேப்ஸிகம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சொருகி பரிமாறினால் சூப்பரான சுவையில் இட்லி டிக்கா ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios