அனைவருக்கும் ஏற்ற ஹெல்த்தி "பச்சை பட்டாணி சப்பாத்தி" செய்யலாம் வாங்க!
வாருங்கள்! சுவையான பச்சை பட்டாணி சப்பாத்தியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை,சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில் உள்ளவர்களின் அன்பினை எளிதில் பெற்று விடலாம். வீட்டில் உள்ளவர்கள் புதுசா, டிஃபரென்டா ஏதாவது செய்து தரும்படி சொல்லுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.
என்ன ரெசிபி என்று யோசிக்கிறீர்களா? சப்பாத்தி தான் இன்று நாம் காண உள்ளோம். சப்பாத்தியில் என்ன வித்தியாசம் இருக்க போகிறது என்று கேட்கறீர்களா? பொதுவாக நாம் உருளைக்கிழங்கு, பாலக் கீரை போன்றவற்றை சேர்த்து சப்பாத்தி செய்திருப்போம். ஆனால் இன்று நாம் கொஞ்சம் புதுமையாக பட்டாணி சேர்த்து சப்பாத்தி செய்ய உள்ளோம். வாருங்கள்! சுவையான பச்சை பட்டாணி சப்பாத்தியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி -1 கப்
கோதுமை மாவு - 1 கப்
தயிர்- 1ஸ்பூன்
பச்சை மிளகாய்- 1
எண்ணெய்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
தண்ணீர் -தேவையான அளவு
ருசியான ஆல்மண்ட் பனானா கேக் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் பட்டாணி எடுத்துக் கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதனை குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வேக வைததுள்ள பச்சை பட்டாணியை சேர்த்து அதனை கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு கப் அளவு கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கோதுமை மாவில் அரைத்த பட்டாணி பேஸ்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் தயிர் பொடியாக அரிந்த பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவு பிசைந்துக் கொள்ள வேண்டும். தேவையென்றால் சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்து சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
இதே போன்று அனைத்து மாவினையும் உருண்டைகள் செய்து பின் தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு பின் தேய்த்து வைத்துள்ள பரோட்டாவை போட்டு தீயினை சிம்மில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பக்கம் வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோ தான்! ருசியான பச்சை பட்டாணி சப்பாத்தி ரெடி!