Asianet News TamilAsianet News Tamil

அனைவருக்கும் ஏற்ற ரைட் சாய்ஸ் ராகி நூடுல்ஸ் !

வாருங்கள்! சத்தான மற்றும் சுவையான ராகி நூடுல்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

How to make Finger Millet Noodles in Tamil
Author
First Published Jan 21, 2023, 6:08 PM IST

தானிய வகைகளில் அதிக ஊட்டச்சத்து தரக்கூடியது என்றால் அது சிறுதானியன்களே.இன்றைய நவீன உலகத்தில் நூடுல்ஸ் வடிவிலும் சிறுதானியங்கள் நமக்கு சந்தைகளில் கிடைக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சிறுதானியத்தில் ஒன்றான ராகி வைத்து ராகி நூடுல்ஸ் செய்வதை காண உள்ளோம்.

துரித உணவுகளில் ஒன்றான நூடுல்ஸை குழந்தைகள் மட்டுமல்லாது இளைஞர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். நூடுல்ஸ் உடலுக்கு கெடுதி எனினும் ஊட்டசத்து மிக்க ராகி கொண்டு செய்யப்படும் நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு ஏதும் இல்லை.

மேலும் இந்த ராகி நூடுல்ஸ் ரெசிபியில் பல்வேறு காய்கறிகளும் சேர்த்து சமைக்க படுவதால் வயதானவர்களுக்கும் இது ஏற்ற ஒரு சிற்றுண்டி எனலாம்.இதனை ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. பின் இதனையே அடிக்கடி செய்து தரும்படி வீட்டில் அனைவரும் கூறுவார்கள்.

வாருங்கள்! சத்தான மற்றும் சுவையான ராகி நூடுல்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  • ராகி நூடுல்ஸ் - 1 கப்
  • பெரிய வெங்காயம் – 2
  • பட்டர் - 1 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
  • கேரட் - 1/2 கப்
  • கேப்ஸிகம்-1/2
  • ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது
  • முட்டைகோஸ் -சிறிது
  • மிளகுத்தூள்- 2 சிட்டிகை
  • எண்ணெய் -தேவையான அளவு
  • உப்பு- தேவையான அளவு

ருசியான ஆல்மண்ட் பனானா கேக் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்!

செய்முறை:

முதலில் பெரிய வெங்காயம், முட்டைகோஸ், கேப்ஸிகம் ஆகியவற்றை மெல்லிய நீளவாக்கில் ஒரே மாதிரியான அளவில் அரிந்து கொள்ள வேண்டும். பின் கேரட் மற்றும் ஸ்ப்ரிங் ஆனியன் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் பாதியளவு தண்ணீர் ஊற்றிக் கொண்டு சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ராகி நூடுல்ஸை போட்டு சுமார் 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். அடுப்பை ஆஃப் செய்து விட்டு மற்றொரு பாத்திரத்தில் நூடுல்ஸை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொண்டு அதில் சிறிது எண்ணெய் சேர்த்து உதிர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பெரிய கடாய் வைத்து அதில் சிறிது பட்டர் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு, பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட்டு பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். 

அடுத்தாக அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள கேரட், கேப்ஸிகம், முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். அனைத்து காய்கறிகளளும் 3/4 பாகம் வெந்த பிறகு அதில் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

பின் அதில் வேக வைத்து எடுத்துள்ள ராகி நூடுல்ஸ் சேர்த்து நன்றாக பிரட்டி விட வேண்டும். அனைத்தும் நன்றாக ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாசனை வரும் போது சிறிது ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால் சூப்பரான, ஆரோக்கியமான ராகி வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios