சளி, இருமல் பிரச்சினையா? மதுரை பேமஸ் முள்ளு முருங்கை வடை செஞ்சு பாருங்க.. வேற லெவல்ல இருக்கும்!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும்  முள்ளு முருங்கை கீரை வடை செய்யலாம்.

how to make Erythrina Indica vada in tamil

 

வடை செய்ய தேவையானப்  பொருட்கள்: 

முள்ளு முருங்கை இலைகள் – 1 கப்
உளுந்து பருப்பு – 1 கப்
இட்லி அரிசி - 1 ஸ்பூன் 
பச்சரிசி - கால் கப் 
உப்பு
சீரகம் - 1 ஸ்பூன் 
மிளகு - 4 
எண்ணெய்

காரப்பொடி செய்ய தேவையானப்  பொருட்கள்: 
மிளகாய் வற்றல் - 3 
உளுந்து பருப்பு - 1 ஸ்பூன் 
மிளகு - 1 ஸ்பூன் 
பூண்டு - 3 பல் 
திப்பிலி - 3
பொட்டுக்கடலை - 5 ஸ்பூன் 
சித்தரத்தை பொடி - 1 ஸ்பூன் 
உப்பு 

முள்ளு முருங்கை வடை செய்முறை: 
முதலில் இட்லி அரிசி, உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்து, அதனுடன்  முள்ளு முருங்கை இலைகள், உப்பு சேர்த்து  நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.  அதில் சீரகம், மிளகு சேர்த்து சப்பாத்தி மாவு பாதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும். மாவில் தண்ணீர் அதிகமாக இருப்பதாக தெரிந்தால் அதில், சிறிது அரிசி மாவை கலந்து கொள்ளலாம். 

பின் மாவை சிறுசிறு உருண்டையாகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.  பின் ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி மாவை,  தட்டிக்கொள்ள வேண்டும். 
ஒரு வாணலியில் வடை சுடும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், மாவை குட்டி பூரி போல பொரித்து எடுத்தால் சுவையான முள்ளு முருங்கை வடை தயார். 

காரப்பொடி செய்முறை: 

ஒரு கடாயில் உளுந்து பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். அதில் மிளகாய் வற்றல், மிளகு சேர்த்து வதக்கிய பின், பூண்டு சேர்த்து வதக்கி விட்டு கடாயை இறக்கி விட வேண்டும். சூடாக இருக்கும் கடாயில் திப்பிலி மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து கிளறி வேண்டும். இவை நன்றாக ஆறிய பின், மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.   இதனுடன் சித்தரத்தை பொடி மற்றும் உப்பு சேர்த்து  இட்லி பொடி போல் அரைக்க டேஸ்டியான காரப் பொடி ரெடி. 

 முள்ளு முருங்கை வடையை இந்த காரப்பொடி உடன் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தம் போல் இருக்கும். இதை சாப்பிட்டால் சளி, இருமல் பிரச்சினைகள் பறந்ததோடும்.

முள்ளு முருங்கை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்: 
1. சத்துக்கள் நிறைந்தது: முள்ளு முருங்கைக்கீரை வைட்டமின் A, C, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் புரதம் போன்ற முக்கிய சத்துக்களை கொண்டுள்ளது.
2. இரத்த சோகை குணமாக்குதல்: அதிக இரும்புச்சத்து கொண்டதால், இரத்த சோகையை குறைக்க உதவுகிறது.
3. எலும்பு ஆரோக்கியம்:இதில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம், எலும்புகளை பலப்படுத்த உதவுகின்றன.
4. இரத்த அழுத்த கட்டுப்பாடு: இதனில் உள்ள போட்டாசியம் இரத்த அழுத்தத்தை சரிவர வைக்க உதவுகிறது.
5. செரிமானத்திற்கு உதவும்: நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
6. எரிச்சல் மற்றும் அழற்சியைக் குறைப்பு: ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் மற்றும் ஆன்டி-இன்ஃபிளமேட்டரி பண்புகள் உள்ளதால் உடல் வலிகளை குறைக்கிறது.
7. தோல் ஆரோக்கியம்: வைட்டமின் C அதிகமாக உள்ளதால் சருமத்திற்கு சீரான தோற்றத்தை வழங்குகிறது.
8. சர்க்கரை அளவு கட்டுப்பாடு: இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
9. ரத்த சுத்திகரிப்பு: ரத்தத்தை சுத்தப்படுத்தி நச்சுகள் வெளியேற்ற உதவுகிறது.
10. எனர்ஜி அதிகரிப்பு: சத்து நிறைந்ததால் உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios