Asianet News TamilAsianet News Tamil

ஈவினிங் ஸ்னாக்ஸ் : "முட்டை வெஜிடேபிள் பணியாரம்" செய்யலாம் வாங்க!

வாருங்கள்! ருசியான முட்டை காய்கறி பணியாரம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Egg Vegetable Paniyaram recipe in Tamil
Author
First Published Jan 3, 2023, 8:04 PM IST

முட்டை வைத்து பல ரெசிபிக்கள் செய்து சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் முட்டை மற்றும் காய்கறிகள் சேர்த்து சூப்பரான சுவையில் பணியாரம் செய்ய உள்ளோம். இதனை வழக்கமாக நாம் செய்கின்ற ஸ்னாக்ஸ் ரெசிபிக்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இதனை ஒரு முறை செய்து கொடுத்தால் , அடிக்கடி செய்து தருமாறு அன்பு கட்டளையிடுவார்கள். 

வாருங்கள்! ருசியான முட்டை காய்கறி பணியாரம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை - 5
வெங்காயம் - 2
தக்காளி - 2
கோஸ் -50 கிராம் 
கேரட் - 1
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன் 
மல்லித்தழை - கையளவு 
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

குட்டிஸ்களுக்கு மிகவும் பிடித்த "முட்டை பாஸ்தா"! இந்த மாதிரி கொடுங்க.

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, மல்லித்தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கேரட் மற்றும் முட்டை கோஸை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின் அதில் துருவி வைத்துள்ள கேரட், முட்டைகோஸ் சேர்த்து கலந்து பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள பச்சை மிளகாய், மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக அதில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் பணியாரக் கல் வைத்து அதன் குழிகளில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். பின் அதில் முட்டை கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டு அதனை சுற்றி சிறிது எண்ணெய் விட வேண்டும். ஒரு புறம் வெந்த பிறகு திருப்பி போட்டு சுற்றி எண்ணெய் சிறிது விட்டு மறுபக்கம் வெந்த பிறகு எடுத்து விட வேண்டும். அவ்ளோதாங்க! ருசியான சூப்பரான முட்டை வெஜிடபிள் பணியாரம் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios