இன்று டின்னருக்கு இந்த முட்டை கொத்து தோசையை செய்து பாருங்க!

வாருங்கள்! சுவையான முட்டை கொத்து தோசையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Egg Kothu Dosai Recipe in Tamil

வழக்கமாக நாம் இட்லி, தோசை,பொங்கல்,பூரி போன்றவற்றை அதிகமாக செய்து சாப்பிட்டு வருகிறவம்.இதனையே தொடர்ந்து சாப்பிடுவதால் நம்மில் பலரும் கொஞ்சம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். வழக்கமாக செய்யும் ரெசிபிகளையே கொஞ்சம் வித்தியாசமாக செய்தாலே போதும் அதன் சுவை அதிகரிக்கும்.

தோசையில் முட்டை தோசை, நெய் தோசை, மசாலா தோசை, ஆனியன் தோசை என்று பல விதமான தோசைகளை சாப்பிட்டு இருப்போம்.அந்த வரிசையில் இன்று நாம் சூப்பரான சுவையில் வித்தியாசமான சுவையில் தோசை செய்ய உள்ளோம். தோசையில் என்ன வித்தியாசம் , என்ன புதுமை என்று கேட்கிறீர்களா?
 

அந்த வரிசையில் முட்டையின் கம கம வாசனையில் முட்டை கொத்து தோசை செய்ய உள்ளோம். இதனை சால்னா வைத்து சாப்பிட்டால் இதன் சுவை அபாரமாக இருக்கும். மேலும் இதனை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வாருங்கள்! சுவையான முட்டை கொத்து தோசையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  • தோசை மாவு - தேவையான அளவு
  • முட்டை - 2
  • வெங்காயம் - 1
  • மிளகு - 1/2ஸ்பூன்
  • சீரகம் - 1/2ஸ்பூன்
  • பட்டர்-- 2 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை - கையளவு
  • உப்பு - தேவையான அளவு

        'மஷ்ரும் ஃப்ரைடு ரைஸ்'' செய்து சாப்பிடலாம் வாங்க!


செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் மல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிளகு மற்றும் சீரகத்தை கல்லில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்றாக பீட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து தோசை மாவை ஊத்தப்பம் போன்று ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது முட்டை கலவையை பரப்பி ஊற்ற வேண்டும். பின் தோசையை மறுபக்கம் திருப்பிப் போட்டு தீயினை மிதமாக வைத்து வேக விட வேண்டும். இவ்வாறு இருந்து அல்லது மூன்று தோசைகளை சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது முட்டை தோசையை ஒரே மாதிரியான அளவில் சிறு துண்டுகளாக பிய்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது பட்டர் சேர்த்து உருகிய பின்னர், சிறிது வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

பின்னர் பிய்த்து வைத்துள்ள தோசைகளை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இடித்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது மல்லித்தழையை தூவி இறக்கினால் சுவையான கொத்து தோசை ரெடி.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios