டின்னர் ஸ்பெஷல் ''மஷ்ரும் ஃப்ரைடு ரைஸ்'' செய்து சாப்பிடலாம் வாங்க!

வாருங்கள் ! ருசியான மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

how to cook Mushroom Fried Rice in an easy way!

வழக்கமாக டின்னருக்கு நாம் செய்கின்ற சப்பாத்தி, புல்கா, பரோட்டா என்று இல்லாமல் கொஞ்சம் மாற்றாக ஒரு ரெசிபியை செய்து சாப்பிட வேண்டும் என்று எண்ணுகிறீர்ர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். 

ஃப்ரைடு ரைஸ் தான் இன்று நாம் காண உள்ளோம். இதில் என்ன வித்தியாசம் இருக்க போகிறது என்று நினைக்கிறீர்களா? வழக்கமாக நாம் எக் ஃப்ரைடு ரைஸ், சிக்கன் ஃப்ரைடு ரைஸ், வெஜ் ஃப்ரைடு ரைஸ் என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் மஷ்ரூம் வைத்து சூப்பரான சுவையில் மஷ்ரும் ஃப்ரைடு ரைஸ் செய்ய உள்ளோம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் இதன் சுவை இருக்கும். 

வாருங்கள்! ருசியான மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: 

மஷ்ரும்-1 பாக்கெட்
வடித்த சாத‌ம் - 4 கப் 
பெரிய வெங்காயம் - 1
கேப்ஸிகம்-1/2
வெங்காய‌த்தாள் - சிறிதளவு
மிள‌குத்தூள் - 1 ஸ்பூன் 
இஞ்சி, பூண்டு - ஒரு ஸ்பூன் 
ப‌ச்சை மிள‌காய் - 3 
சோயா சாஸ் -2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் மஷ்ருமை அலசிக் கொண்டு ஒரே மாதிரியான அளவில் நீட்ட நீட்டமாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கேப்ஸிகம், பெரிய வெங்காயம் ஆகியவற்றையும் மெல்லிய நீட்டமாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகா ய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின்பு, அதில் வெங்காய‌ம் சேர்த்து வதக்கி விட்டு பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விட வேண்டும். 

பின் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து கொஞ்சம் வதக்கிய பிறகு, அரிந்து வைத்துள்ள மஷ்ரும்களை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். 

அனைத்தும் நன்றாக கலந்த பின்னர் அதில் உப்பு சேர்த்து கிளறிக் கொண்டு பின் அதில் வடித்து வைத்திருக்கும் உதிர்ந்த சாதத்தைக் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

அடுத்தாக மிளகுத்தூள் மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு இறக்கி விட வேண்டும். பின் இறுதியாக அதன் மேல் சிறிது வெங்காயத் தாள்களை போட்டு ஒரு முறை பிரட்டி எடுத்தால் சுவையான சூப்பரான மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் ரெடி!!! இன்று இரவே டின்னருக்கு இதனை செய்து அசத்துங்க

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios