சூடான இட்லி, சாதத்திற்கு இந்த கருவாட்டு பொடியை வைத்து சாப்பிடுங்கள். வேறு எதையும் தேட மாட்டீர்கள்.
வாருங்கள்! ருசியான கருவாட்டு பொடியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் இட்லி, தோசை போன்றவைகளுக்கு சட்னி,சாம்பார் என்று சாப்பிட்டு போர் அடிக்கிறதா? வேறு ஏதேனும் எளிமையாக, புதுமையாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.
இன்று நாம் இட்லி,தோசை போன்றவைகளுக்கு தொட்டு கொள்ள சூப்பரான பொடி ரெசிபியை தான் காண உள்ளோம். பொடியில் என்ன புதுமை என்று யோசிக்கிறீரங்களா? வழக்கமாக பொடியை பருப்பு வகைகளை வைத்து தான் செய்து இருப்போம். ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது (காய்ந்த) இறால் வைத்து அட்டகாசமான பொடியை தான் பார்க்க உள்ளோம்.
இந்த (காய்ந்த) இறால் பொடியை மிக குறைந்த நேரத்தில் மிகவும் சுலபமாக செய்து விடலாம். இதனை இட்லி,தோசைக்கு மட்டுமல்லாது சூடான சாதத்திலும் சேர்த்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும். வேறு எதையும் தேட மாட்டீர்கள்.
வாருங்கள்! ருசியான கருவாட்டு பொடியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
- இறால் கருவாடு - 1/4 கிலோ
- தேங்காய்த் துருவல் - 200 கிராம்
- சின்ன வெங்காயம் - 7
- பூண்டு - 8 பற்கள்
- காய்ந்த மிளகாய் - 10
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- புளி - எலுமிச்சை அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
காலை உணவிற்கு பெஸ்ட் சாய்ஸ் கோதுமை மாவு கீரை அடை !
செய்முறை:
முதலில் கருவாட்டை நன்றாக தண்ணீரில் அலசிக் கொண்டு தண்ணீர் இல்லாமல், உலர செய்து கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை நீட்ட நீட்டமாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி,எண்ணெய் சூடான பின் கருவாட்டைச் சேர்த்து தீயினை சிம்மில் வைத்து மொறுமொறுவென்று மாறும் வரை வறுத்துக் கொண்டு தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து , எண்ணெய் காய்ந்த பிறகு அதில் காய்ந்த மிளகாய் ,சீரகம், சேர்த்து வறுத்துக் கொண்டு அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் புளி சேர்த்து நன்றாக வதக்கி கொண்டு, பின் துருவி வைத்துள்ள தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கிவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
இந்த கலவையில் கருவாடு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொண்டு , சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான்! ருசியான இறால் பொடி ரெடி! இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.