Asianet News TamilAsianet News Tamil

அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய ரெசிபி தால் சுக்கா !

வாருங்கள் ! ருசியான தால் சுக்காவினை வீட்டில் எப்படி எளிமையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Dal Chukka in Tamil
Author
First Published Jan 15, 2023, 3:42 PM IST

தினமும் ஒரே மாதிரியான உணவு வகைகளை செய்து சாப்பிட்டு சலித்து விட்டதா? கொஞ்சம் மாற்றாக ஏதேனும் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். இன்று நாம் பாசிபருப்பினை வைத்து ஒரு அசத்தலான ஒரு ரெசிபியை காண உள்ளோம். வழக்கமாக நாம் பாசிபருப்பினை சேர்த்து சாம்பார், கூட்டு என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம்.இன்று நாம் சற்று வித்தியாசமாக பருப்பினை வைத்து சுக்கா செய்ய உள்ளோம். இதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

வாருங்கள் ! ருசியான தால் சுக்காவினை வீட்டில் எப்படி எளிமையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

 

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1/2 கப்

வெங்காயம் - 1

இஞ்சி - 1/2 இன்ச்

பூண்டு - 4 பற்கள்

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

தனியா தூள் - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

லெமன் ஜூஸ்- 2 ஸ்பூன்

மல்லித்தழை-கையளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு
                                                   

மீந்த சாதத்தில் மொறுமொறு "பக்கோடா" செய்து கொடுங்க!

      செய்முறை:

முதலில் வெங்காயத்தை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை போட்டு மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்டினை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

பின் அதில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும். பின்பு மஞ்சள் தூள், தனியா தூள்,மிளகாய் தூள, உப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி விட வேண்டும்.
இப்போது ஒரு குக்கரில் பாசிப்பருப்பை சேர்த்து அலசி விட்டு, அதில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு , 3 விசில் வரும் வரை வைத்து இறக்கி விட வேண்டும்.

விசில் அடங்கிய பின் குக்கரை திறந்து பருப்பினை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் சீரகத்தை சேர்த்து வறுத்துக் கொண்டு அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை பாசிப்பருப்பு கலவையில் சேர்த்து கலந்து விட்டு, பின் அதில் பொடியாக அரிந்த மல்லித்தழை மற்றும் 2 ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கிளறினால் டேஸ்ட்டான தால் சுக்கா ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios