மீந்த சாதத்தில் மொறுமொறு "பக்கோடா" செய்து கொடுங்க! ஒரு நிமிடத்தில் அனைத்தும் காலி!
வாருங்கள்! மீதமான சாதம் கொண்டு சுவையான பக்கோடாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக சமைத்த சாதம் மீந்து போனால் எல்லாரும் அதனை வடகம் அல்லது வத்தல் தான் செய்வோம். ஒரு சிலர் பிரைட் ரைஸ் செய்வார்கள் .
அதை தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் சாதம் வைத்து அருமையான மாலை நேர ஸ்னாக்ஸ் செய்யலாம்.
என்ன ஸ்னாக்ஸாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? மீதமான சாதம் வைத்து சூப்பரான மொறுமொறுவென பக்கோடா ரெசிபியை செய்யலாம். இந்த பக்கோடாவை மிக சுலபமாக செய்ய முடியும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வாருங்கள்! மீதமான சாதம் கொண்டு சுவையான பக்கோடாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
சாதம் - 2 கப்
கடலைமாவு - 1 கப்
கார்ன் பிளார்-2 ஸ்பூன்
இஞ்சி- 1 துண்டு
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை -கையளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் "பிளம் கேக் " வீட்டிலிலேயே செய்யலாம் வாங்க!
செய்முறை :
முதலில் வெங்காயம் மற்றும் இஞ்சியை மிக பொடியாக அரிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அதே போன்று பச்சை மிளகாய், மற்றும் மல்லித்தழையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு விலசாமான பாத்திரத்தில் சாதத்தை சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் கடலைமாவு மற்றும் கார்ன் பிளார் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து கிளறி விட்டு பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்தாக அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள பச்சைமிளகாய், மல்லித்தழை சேர்த்து கிளறி விட வேண்டும். இறுதியாக பொடியாக அரிந்த கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். பின் அந்த எண்ணெய்யை சிறிது எடுத்து பிசைந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் பக்கோடா போன்று கிள்ளி போட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொள்ள வேண்டும். பக்கோடா கொஞ்சம் சிவந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு சிவக்க செய்து எடுக்க வேண்டும். அவ்ளோதான்! ருசியான மொறுமொறுவென்ற ரைஸ் பக்கோடா ரெடி!