இரத்த சோகையை தடுக்கும் "கறிவேப்பிலை பூரி" செய்து கொடுத்தால் குட்டிஸ்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
வாருங்கள்! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கறிவேப்பிலை வைத்து பூரி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக எந்த ஒரு உணவும் தாளித்த பிறகுத் தான் முழுமையடையும். அப்படி தாளிக்க பயன்படும் கறிவேப்பிலயை வைத்து ஒரு ரெசிபியை காண உள்ளோம். மார்க்கெட்களில் காய்கறிகளுடன் இலவசமாக தரும் கறிவேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது. கறிவேப்பிலையில் இரும்பு சத்தும், ஃபோலிக் அமிலமும் இருப்பதால், உடலில் ரத்த சோகையை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால் கல்லீரலை பாதுகாக்கிறது.இருக்கும் மேலும் இதிலுள்ள வைட்டமின் ஏ கண்களை பாதுகாக்கவும் செய்கிறது. மேலும் டயாபடிஸ் எனப்படும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கறிவேப்பிலையை அதிகமாக எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டது.
ஃபீனால் எனப்படும் வேதிப்பொருள் கறிவேப்பிலையில் அதிகமாக உள்ளதால் குடல் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலைகளை தொடர்ந்து உட்கொண்டால் பல்வேறு நன்மைகள் உண்டாகும் . ஆனால் சிறு குழந்தைகள்,இளைஞர்கள் இதனை சாப்பிட மறுப்பார்கள். அப்படி பட்டவர்களுக்கு கறிவேப்பிலை பொடி,சட்னி, ரொட்டி,பூரி போன்றவை செய்வதன் மூலம் அனைவருக்கும் அதன் சத்து முழுமையாக கிடைக்கும்.மேலும் தலை முடி பிரச்சனைகளான இளநரை, முடி கொட்டுதல், வறட்சி மிகுந்த கூந்தல், மெல்லிய கூந்தல் இம்மாதிரியான பிரச்சனைகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது. மேலும், கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
வாருங்கள்! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கறிவேப்பிலை வைத்து பூரி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருள்கள் :
கறிவேப்பிலை - 3 கையளவு
பச்சரிசி- 1/4 கிலோ
மிளகு-10
சித்தாரத்தை- சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
இதயத்தை வலுவாக்கும் "கவுனி அரிசி காரப் புட்டு"ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க !
செய்முறை :
முதலில் கறிவேப்பிலையை அலசி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 3 மணி நேரத்திற்கு பிறகு அரிசியை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பின் அதில் அலசி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து அரைக்க வேண்டும். சிறிது தண்ணீர் விட்டு மிளகு, சித்தாரத்தை மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட வேண்டும். இப்போது ஒரு வாழை இலை எடுத்துக் கொண்டு அதில் சிறிது எண்ணெய் தடவி மாவினை கொஞ்சம் எடுத்து வடை போன்று தட்டையாக தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு ஒரு பக்கம் வெந்த பிறகு மறு பக்கம் திருப்பி போட்டால் சத்தான கறிவேப்பிலை பூரி ரெடி! எண்ணெய் விரும்பாதவர்கள் அல்லது தோசைக்கல்லில் போட்டு ரொட்டி போன்றும் செய்து சாப்பிடலாம்.