Asianet News TamilAsianet News Tamil

இனி சிக்கன் வாங்கினா இப்படி செய்து பாருங்க! தயிர் சிக்கன் கிரேவி!

வாருங்கள்! ருசியான தயிர் சிக்கன் கிரேவியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Curd Chicken Gravy in Tamil
Author
First Published Jan 3, 2023, 5:59 PM IST

அசைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் ரெசிபி என்றால் சிக்கன் தான் முதலிடம் பிடிக்கும். சிக்கனை பல விதங்களில் சமைத்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் ருசியான தயிர் சிக்கன் கிரேவியை காண உள்ளோம். வழக்கமாக செய்யும் சிக்கன் ரெசிப்பிகளில் இருந்து இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை மிக பிரமாதமாக இருக்கும். 

வாருங்கள்! ருசியான தயிர் சிக்கன் கிரேவியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருள்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
லெமன் ஜூஸ் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன் 
மல்லி தூள் - 1/2 ஸ்பூன் 
காஸ்மீரி மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு:

மிளகு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 8 பற்கள் 
இஞ்சி - 1 துண்டு

குட்டிஸ்களுக்கு மிகவும் பிடித்த "முட்டை பாஸ்தா"! இந்த மாதிரி கொடுங்க.

செய்முறை:

முதலில் சிக்கனை அலசிக் கொண்டு பின் அதனை ஒரே மாதிரியான அளவில் சிறிய துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு மிக்சி ஜாரில் மிளகு, சோம்பு, இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். 

அரைத்த பேஸ்ட்டை சிக்கனில் சேர்த்து விட்டு நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கெட்டி தயிர்,மஞ்சள் தூள், மல்லித் தூள்,கரம் மசாலா தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்து விட வேண்டும். 

பின் சிக்கன் கலவையை சுமார் 1/2 மணி நேரம் அப்படியே வைத்து ஊற விட வேண்டும். லெமன் ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின், ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு , அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கிளறி விட வேண்டும். 

சிக்கன் நன்றாக வெந்து அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறிக் கொண்டு பின் அதில் லெமன் ஜீஸ் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். 

அவ்ளோதான்!ருசியான தயிர் சிக்கன் கிரேவி ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios