Asianet News TamilAsianet News Tamil

ரம்ஜான் ஸ்பெஷல் 2023: பிரியாணிக்கு பெஸ்ட் சைட் டிஷ் க்ரிஸ்பி ஃபிரைட் சிக்கன் செய்து சுவைக்கலாம் வாங்க!

வாருங்கள்! மொறுமொறு க்ரிஸ்பி ஃபிரைட் சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Crispy Fried Chicken Recipe in Tamil
Author
First Published Apr 21, 2023, 8:54 PM IST | Last Updated Apr 21, 2023, 8:54 PM IST

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் உலகம் முழுவதும் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ளது  ரம்ஜான் என்றதுமே நாம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சாதி, மத, இன பேதமின்றி அனைவரும் பகிர்ந்து சாப்பிடும் நோன்புக் கஞ்சியும், பிரியாணியும் தான். அதுவும் இஸ்லாமியர்கள் செய்யும் பிரியாணி என்றால் ஒரு அலாதியான சுவை தான். பிரியாணிக்கு அடுத்தபடியாக பல விதங்களில் செய்யப்படுகின்ற அசைவ உணவுகளை சொல்லலாம் .

அந்த வகையில் இன்று நாம் சுவையான, மொறுமொறுவென இருக்கும் க்ரிஸ்பி ஃபிரைட் சிக்கன் ரெசிபியை தான் காண உள்ளோம். இதனை செய்யும் பொழுதே வீட்டில் உள்ள அனைவரும் எப்போது தான் சாப்பிடக் கொடுப்பார்கள் என்று ஏங்கி, காத்துக் கொண்டு இருப்பார்கள்.

வாருங்கள்! மொறுமொறு க்ரிஸ்பி ஃபிரைட் சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ
முட்டை-2
மைதா மாவு- 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
தயிர்- 100 கிராம்
காஷ்மீர் மிளகாய் தூள்-2 ஸ்பூன்
இத்தாாலிியன் இழை- 2
கார்ன் மாவு- 2 ஸ்பூன்
மிளகு பொடி- 1 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கன் அலசி வைத்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள்,முட்டை, இத்தாலிய இழை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் தயிர் சேர்த்து மீண்டும் பிரட்டிக் கொள்ள வேண்டும். பின் இதனை சுமார் 5 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 5 மணி நேரத்திற்கு பிறகு, ஊறவைத்த சிக்கனுடன் இத்தாலிய இழை, மைதா,மிளகு தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள், ஆகியவை சேர்த்து மீண்டும் நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்த பின்னர் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட்டு பிரட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை ஒவ்வொரு துண்டுகளாக போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான க்ரிஸ்பி ஃபிரைட் சிக்கன் ரெடி! இந்த க்ரிஸ்பி ஃபிரைட் சிக்கன் ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து குடும்பத்துடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழுங்கள். 

கோதுமை மாவு வைத்து சப்பாத்தி தான் செய்யணுமா என்ன? சத்தான இடியாப்பம் கூட செய்யலாம் தெரியுமா ?
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios