Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் "சாக்லேட் சாண்ட்விச்"

வாருங்கள்! சுவையான சாக்லேட் சாண்ட்விச் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 How to make Chocolate Sandwich in Tamil
Author
First Published Feb 3, 2023, 3:55 PM IST

தினமும் காலை இட்லி, தோசை, பூரி என்று சாப்பிட்டு அலுத்து போன குட்டிஸ்களுக்கும், பெரியவர்களுக்கும் அவர்கள் விரும்பி சாப்பிடும் விதத்தில் ஒரு சூப்பரான ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். இன்றைய குழந்தைகள் சாண்ட்விச் போன்ற உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். சாண்ட்விச்சில் பன்னீர் சாண்ட்விச், கார்ன் சாண்ட்விச், சிக்கன் சாண்ட்விச், சீஸ் சாண்ட்விச் என்று பல வெரைட்டிகள் இருக்கின்றன.அந்த வகையில் இன்று நாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சாக்லேட் சாண்ட்விச்சை தான் காண உள்ளோம். 

சாக்லேட் சாண்ட்விச் ரெசிபியை மிக குறைந்த நேரத்தில் செய்ய முடிவதால் சமைக்கும் நேரமும் குறைவு. வீட்டில் பிரட்டும்,சாக்லேட் சிப்ஸும் இருந்தால் போதும் சட்டென்று எப்போது வேண்டுமானாலும் இதனை செய்து விடலாம். மேலும் இதனை காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டியாகவும் இதனை செய்து கொடுக்கலாம். எப்போது செய்து கொடுத்தாலும் சத்தமில்லாமல் குழந்தைகள் சமத்தாக சாப்பிட்டு முடிப்பார்கள்.

வாருங்கள்! சுவையான சாக்லேட் சாண்ட்விச் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • பிரட் - 4 துண்டுகள்
  • டார்க் சாக்லேட் துண்டுகள் - 4 ஸ்பூன்
  • பட்டர்-தேவையான அளவு
  • சீஸ் -தேவையான அளவு

இந்த வார சண்டேக்கு ஆந்திரா ஸ்டைலில் ஸ்பைசி மட்டன் குழம்பு வைத்து சாப்பிடுங்க!


செய்முறை:

முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் பட்டர் தடவி ஸ்ப்ரெட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்து பிரெட் துண்டுகளின் மேலும் பட்டர் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். சீஸினை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். சாக்லேட்களை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது பட்டர் தடவிய பிரெட்களின் மேற்பரப்பில் சாக்லேட் துண்டுகளை வைத்து விட வேண்டும். பின் துருவிய சீஸ்களை வைத்து விட வேண்டும். அதன் மேல் மற்றொரு பட்டர் தடவிய பிரெட் வைத்து மூடி விட வேண்டும். இவ்வாறு அனைத்து பிரட் துண்டுகளையும் செய்து விட வேண்டும்.

அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து சிறிது பட்டர் தடவி ரெடி செய்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, லேசாக அழுத்தி விட வேண்டும். இப்போது பிரட்டின் மேல் கொஞ்சம் பட்டர் தடவி ஸ்ப்ரெட் செய்தது கொள்ள வேண்டும். பிரெட் டோஸ்ட் ஆன பிறகு, மறுபக்கம் திருப்பிப் போட்டு சிறிது பட்டர் தடவி டோஸ்ட் செய்து கொண்டால் சாக்லேட் சாண்ட்விச் ரெடி! நீங்களும் இதனை ஒரு முறை செய்து பாருங்கள். உங்கள் வீட்டுக் குட்டிஸ்கள் மீண்டும் மீண்டும் இதனை செய்து தரும்படி ஆடம் பிடிப்பார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios