அருமையான சிக்கன் மோமோஸ் எப்படி செய்வது?பார்க்கலாம் வாங்க!

இன்று நாம் சூப்பரான சிக்கன் ரெசிபியை காண உள்ளோம். அருமையான சிக்கன் மோமோஸ் தான் இன்று நாம் காண உள்ளோம். 

How to make Chicken Momos in Tamil

அசைவ வகைகளில் ஒன்றான சிக்கன் வைத்து பல் விதமான ரெசிபிக்களை செய்யலாம். அனைத்து ரெசிப்பிகளும் ஒரு தனி சுவையை தரும். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சிக்கன் ரெசிபியை காண உள்ளோம். அருமையான சிக்கன் மோமோஸ் தான் இன்று நாம் காண உள்ளோம். 

இதனை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் விதத்தில் இதன் சுவை அருமையாக இருக்கும். வழக்கமாக இதனை நாம் ரெஸ்டாரண்ட்களில் தான் சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் அதனை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 

தேவையான பொருட்கள்:

மாவு தயார் செய்வதற்கு :

மைதா மாவு- 1 கப் 
தண்ணீர்- சிறிது 
உப்பு தேவையான அளவு 

சிக்கன் ஸ்டபிங் செய்வதற்கு :

சிக்கன்-1/2 கிலோ 
பெரிய வெங்காயம் 1-/2
முட்டைகோஸ் -1 கப் 
கேரட் -1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன் 
மிளகு தூள் -1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் -1/2 ஸ்பூன் 
மல்லித்தழை- கையளவு 
தண்ணீர்- 2 ஸ்பூன் 
உப்பு- தேவையான அளவு 

ருசியான ஆல்மண்ட் பனானா கேக் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்

செய்முறை:

முதலில் சிக்கனை சுத்தம் செய்து விட்டு நன்றாக அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், கேரட், கோஸ் மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு பௌலில் மைதா மாவு எடுத்துக் கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் மாவினை ஒரு ஈரத்துணி போட்டு  மூடி 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு மிக்ஸி ஜாரில் சிக்கனை சேர்த்து அரைத்துக் கொண்டு அதனை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சிக்கனில் பொடியாக அரிந்த வெங்காயம்,,முட்டைகோஸ், கேரட், மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

பின் அதில் மிளகுத்தூள்,மிளகாய் தூள்,மல்லித்தழை மற்றும் உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். 

பின் இந்த கலவையில் சிறிது தண்ணீர் விட்டு மீண்டும் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இப்போது பிசைந்த மாவினை எடுத்து நன்கு பெரிய வடிவில் தேய்த்துக் கொள்ள வேண்டும். 

மாவினை பெரிய வட்டமாகவும், மெல்லிதாகவும் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் சிறிய மூடியினால் சிறு சிறு வட்டங்களாக வெட்டி எடுத்துக் கொண்டு அதில் கலந்து வைத்துள்ள சிக்கனை வைத்து மடித்து விட வேண்டும். 

அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் இட்லி தட்டி,ன் மீது சிறிது எண்ணெய் தடவி விட்டு,அதன் மேல் நாம் செய்து வைத்துள்ள மோமோஸை சுமார் 15 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான்! சுவையான சிக்கன் மோமோஸ் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios