Asianet News TamilAsianet News Tamil

அனைவரும் விரும்பி சாப்பிடும் "பட்டர் முறுக்கு" செய்வோமா!

வாருங்கள்! டேஸ்ட்டான பட்டர் முறுக்கு ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to make Butter Muruku Recipe in Tamil
Author
First Published Jan 28, 2023, 1:24 PM IST

இன்றைய நவீன உலகத்தில் என்ன தான் இன்று வித விதமான ஸ்னாக்ஸ் வகைகள் இருந்தாலும் முறுக்கு சுவைக்கு ஈடு எதுவும் இருக்காது. வழக்கமாக முறுக்கு போன்ற ரெசிபிக்களை தீபாவளி மற்றும் வீட்டின் விஷேஷ தினங்களில் செய்து சாப்பிட்டு இருப்போம். இதனை ஒரு முறை செய்தால் பல நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். 
முறுக்குக்களில் அச்சு முறுக்கு, மணப்பாறை முறுக்கு, ரிப்பன் முறுக்கு என்று பல விதங்கள்இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் பட்டர் முறுக்கு ரெசிபியை காண உள்ளோம். மேலும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் பாக்ஸில் கூட கொடுத்து அனுப்பலாம்.  இதன் சுவை மொறுமொறுவென இருப்பதால் சிறு குழந்தைகள் அல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் உறவினர்கள் ,நண்பர்கள் என்று கெஸ்ட்கள் வரும் போது இதனை நாமே நம் கைகளால் செய்து கொடுத்து நமது அன்பை பரிமாறலாம்.

வாருங்கள்! டேஸ்ட்டான பட்டர் முறுக்கு ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


தேவையான பொருட்கள்: 

அரிசி மாவு – 3 கப்
கடலை மாவு – 1/2 கப்
பட்டர் – 5 ஸ்பூன் 
சீரகம் – 2 ஸ்பூன் 
உளுந்து மாவு – 1 ஸ்பூன் 
பெருங்காயம் – சிட்டிகை 
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு 

குளுகுளுவென்று குலுக்கி சர்பத் செய்து பருகலாம் வாங்க!

செய்முறை:

ஒரு விலாசமான பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு மற்றும் உளுந்து மாவு கொள்ள வேண்டும். அடுத்தாக பட்டர் ,சீரகம், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். சிறிது சிறிதாக வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு பிசைய வேண்டும். மாவினை கெட்டியாக பிசைந்து (கட்டி இல்லாமல் பிசைய வேண்டும்) சுமார் 1/2 மணி நேரம் வரை ஊரு ஈரத்துணியை போட்டு அப்படியே வைத்து விட வேண்டும். 

ஒரு 1/2 மணி நேரத்திற்கு பிறகு முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, மாவினை கொஞ்சம் போட்டுக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் முறுக்கு சுடுவதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு , முறுக்கு பிழிந்து விட வேண்டும். அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து முறுக்கு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதே போன்று பிசைந்து வைத்துள்ள அனைத்து மாவினையும் முறுக்குகளாக சுட்டு எடுத்துக் கொண்டால் மொறுமொறுவென பட்டர் முறுக்கு ரெடி!
முறுக்குகளை பக்குவமாக எடுத்து ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios