இனி வீட்டின் விசேஷ தினங்களில் பாரம்பரியமான பூந்தி லட்டு செய்யலாம்.

வாருங்கள்! பாரம்பரியமான பூந்தி லட்டு ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Besan Boondi Laddu in Tamil

ஸ்வீட் என்று சொல்லும் பொழுது லட்டும் நிச்சயம் இடம் பெற்று இருக்கும். இந்த லட்டினை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை அனைத்து விஷேஷ தினங்கள், வீட்டில் பிறந்த நாள்,திருமண நாள், சுப தினங்கள் போன்றவற்றின் போது நாம் பலரும் இதனை கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். இன்று நாமே நம் கைகளில் வீட்டிலேயே மிக சுலபமாக குறைந்த நேரத்தில் சட்டென்று செய்து விடலாம்.

லட்டில் ரவா லட்டு , தேங்காய் லட்டு, ஓட்ஸ் லட்டு, மோட்டிச்சூர் லட்டு, பாசிப்பருப்பு லட்டு, ஓட்ஸ் லட்டு என்று பல விதங்கள் உள்ளன.இன்று நாம் பாரம்பரியமான பூந்தி லட்டு ரெசிபியை காண உள்ளோம். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை ருசித்து சாப்பிடுவார்கள்.

வாருங்கள்! பாரம்பரியமான பூந்தி லட்டு ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு- 2கப்
  • சக்கரை-3 கப்
  • கிராம்பு-5
  • ஏலக்காய் தூள்- 2 சிட்டிகை
  • முந்திரி- 20
  • திராட்சை -10
  • நெய்- தேவையான அளவு
  • எண்ணெய்- தேவையான அளவு

இந்த மாதிரி தக்காளி தோசை சாப்பிட்டு இருக்கீங்களா!

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு சிட்டிகை மஞ்சள் புட் கலர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சக்கரை மற்றும் தண்ணிர் ஊற்றி கொத்திக்க வைக்க வேண்டும். இரண்டும் நன்கு கரைந்து கம்பி பதத்திற்கு பாகு வந்த பிறகு அடுப்பை ஆஃப் செய்து பாத்திரத்தை இருந்து இறக்கி வைத்து விட வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின் அடுப்பின் தீயினை அதிகமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடலைமாவு கலவையை பூந்திக் கரண்டியில் எடுத்து கடாயில் ஊற்றி ஒரு நிமிடத்திற்குள் எடுத்து பின் அதனை உடனடியாக சக்கரை பாகில் போட்டு விட வேண்டும். பூந்தி அதிகமாக முறுக விடக் கூடாது. இவ்வாறு அனைத்து மாவினையும் செய்துக் கொள்ள வேண்டும்.பின் 3 ஸ்பூன் பூந்தியை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரே ஒரு சுற்று சுற்றி மசித்து எடுத்துக் கொண்டு அதனை பூந்தி உள்ள தட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் நெய் சேர்த்து, நெய் உருகிய ஓய்ந்தனர் முந்திரி ,திராட்சை சேர்த்து வறுத்துக் கொண்டு அதனை கலவையில் நெய்யோடு சேர்த்து சிறிது ஏலக்காய்த்தூள் தூவி நன்றாக கிளறி விட்டு ஒரே மாதிரியான அளவில் உருண்டைகளாக பிடித்துக் கொண்டால் சூப்பரான பூந்தி லட்டு ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios