இந்த மாதிரி தக்காளி தோசை சாப்பிட்டு இருக்கீங்களா!

வாருங்கள்! சத்தான சுவையான தக்காளி தோசையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Tomato Dosai Recipe in Tamil

நம்மில் பலரும் பெரும்பாலும் காலை மற்றும் இரவு உணவாக இட்லி, தோசை வகைகளை தான் அதிகமாக செய்து சாப்பிடுவோம். குறிப்பாக குழந்தைகள் இட்லியை விட தோசை வகைகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள் . தோசை எனில் முட்டை தோசை, பொடி தோசை, ஆனியன் தோசை, அடை தோசை என்று பல விதங்களாக செய்து கொடுத்து இருப்போம். ஆனால் இன்று சற்று வித்தியாசமாக தக்காளி வைத்து ஒரு தோசையை செய்ய உள்ளோம்.

என்ன தக்காளி தோசையா என்று நினைக்கிறீர்களா? ஆமாங்க. தக்காளி வைத்து சுவையான தோசையை செய்து உங்கள் வீட்டு குயூட்டிஸ்களுக்கு சாப்பிட கொடுங்கள். மிக சமத்தாக அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள் சத்தமில்லாமல்.
வழக்கமாக தக்காளி வைத்து சட்னி, குழம்பு, குருமா,தக்காளி சாதம் போன்றவையே அதிகமாக செய்துஇருப்போம். ஆனால் இன்று தக்காளி வைத்து மொறுமொறு தோசை செய்யலாமா!

வாருங்கள்! சத்தான சுவையான தக்காளி தோசையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • நன்கு பழுத்த தக்காளி – 5
  • பச்சரிசி – 1 கப்
  • புழுங்கல் அரிசி – 1 கப்
  • உளுத்தம்பருப்பு –1/2 கப்
  • காய்ந்த மிளகாய் – 8
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • எண்ணெய் -தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

புற்று நோயில் இருந்து நம்மை காக்கும் "வேர்க்கடலை சட்னி"! 

செய்முறை:

முதலில் பருப்பபு மற்றும் அரிசியை நன்றாக அலசி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின் அவைகளை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை அலசி விட்டு அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கிரைண்டரில் ஊற வைத்த அரிசி, உளுத்தம் பருப்பு, சோம்பு, காய்ந்த வர மிளகாய், தக்காளி மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து தோசை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது கொஞ்சமாக செய்தல் மிக்ஸி ஜாரில் கூட அரைத்துக் கொள்ளலாம்,

இப்போது ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு அதனை 2 மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விட வேண்டும். 2 மணி நேரத்திற்கு பிறகு,அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து சூடான பிறகு அதில் மாவை தோசையாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு ஒரு பக்க வேக வைக்க வேண்டும். ஒரு பக்கம் வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு தோசையாக வார்த்து எடுத்தால் மொறுமொறு தக்காளி தோசை ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios