Asianet News TamilAsianet News Tamil

இந்த தீபாவளிக்கு பெங்காலி ஸ்வீட் வெல்ல சந்தேஷ் செய்யலாம்!

அனைவரும் ஒன்றாக கூடி இந்த தீபாவளியை மேலும் சிறப்பாக்க இந்த முறை வீட்டிலேயே பெங்காலியின் மிகவும் பிரசித்தி பெற்ற பெங்காலி வெல்ல சந்தேஷ் ஸ்வீட் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் 

How to make Bengali special sweet Sandesh in Tamil
Author
First Published Oct 20, 2022, 11:49 PM IST

தீபாவளிக்கு இன்னும் மிக குறைவான நாட்களே உள்ளன. உறவினர்கள் வீட்டிற்கோ, நண்பர்கள் வீட்டிற்கோ செல்ல பிளான் செய்து இருப்பீர்கள். அல்லது உங்கள் வீட்டிற்கு நண்பர்களோ, உறவினர்களோ வர இருப்பார்கள் .அனைவரும் ஒன்றாக கூடி இந்த தீபாவளியை மேலும் சிறப்பாக்க இந்த முறை வீட்டிலேயே பெங்காலியின் மிகவும் பிரசித்தி பெற்ற பெங்காலி வெல்ல சந்தேஷ் ஸ்வீட் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் .

பொதுவாக நாம் தீபாவளிக்கு ஒரு சில ஸ்வீட்ஸ் மற்றும் ஒரே மாதிரியான ஸ்வீட்ஸ் தான் வருடா வருடம் செய்து கொண்டு இருப்போம். இந்த வருடம் நாம் பெங்காலியின் மிக பிரபலமான பெங்காலி சந்தேஷ் ஸ்வீட்டை குறைவான நேரத்தில் மிக எளிமையாக மற்றும் சுவையாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

இந்த ஸ்வீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் அருமையாக இருக்கும். மேலும் நாமே நம் கைப் பக்குவத்தில் செய்வதால் அவர்கள் மீது நாம் வைத்துள்ள அன்பினை மேலும் அதிகரிக்கும். சரிங்க பெங்காலி சந்தேஷ் ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தீபாவளி ஸ்பெஷல்! : என்ன ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா?

தேவையான பொருட்கள்:

1 லிட்டர் கெட்டியான பால்
3/4 கப் வெல்லம்
பிஸ்தா சிறிது 
ஏலக்காய் தூள் 
வினிகர் சிறிது 
நீர் சிறிது 

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 லிட்டர் திக்கான பாலை ஊற்றி வைத்து காய்ச்ச வேண்டும். பால் கொதிக்க ஆரம்பித்த பிறகு அடுப்பை ஆப் செய்து விட வேண்டும்.பின் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கலந்து அதில் சில துளிகள் வினிகர் சேர்த்து நன்றாக கலந்து அதனை பாலில் ஊற்றி திரிய விட வேண்டும்.

பால் திரிந்து கெட்டியான பிறகு, ஒரு கிண்ணத்தில் மஸ்லின் துணியைப் போட்டு பாலை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இப்போ நமக்கு பனீர் கிடைத்து விடும். இப்போது பனீரில் வினிகரின் வாசனை செல்லும் வரை இரண்டு தடவை தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். பனீர் வைத்துள்ள மஸ்லின் துணியை நன்றாக அழுத்தி அதில் உள்ள அதிக தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இப்போது துணியில் உள்ள பனீரை எடுத்து ஒரு தட்டில் வைத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

இந்த தீபவளிக்கு டபுள் லேயர் சாக்கோ பீனட் பர்ஃபி ! செய்யலாம் வாங்க!

தட்டில் உள்ள பனீரில் ஏலக்காய் பொடி மற்றும் ஆர்கானிக் வெல்லத்தை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். நாம் எந்தளவுக்கு பிசைகிறமோ அந்த அளவுக்கு சாஃப்டான சந்தேஷ் நமக்கு கிடைக்கும்.

இப்போது இந்த பனீர் கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு சில நிமிடங்கள் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கலவை நன்கு கலந்து இருக்கும்.பின் பன்னீர் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொண்டு, பேப்பர் கப்புகளில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் துருவிய பிஸ்தா பருப்புகளை மேல் வைத்து அலங்கரித்து விட்டு பிரிட்ஜில் வைத்து குளிர்ந்த பின் சாப்பிட்டால் அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios