Asianet News TamilAsianet News Tamil

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பீட்ரூட் வைத்து சுவையான பீட்ரூட் பஜ்ஜி !

வாருங்கள்! டேஸ்ட்டான பீட்ரூட் பஜ்ஜி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Beetroot Bajji in Tamil
Author
First Published Jan 23, 2023, 10:48 AM IST

வழக்கமாக மாலை நேரங்களில் நாம் சாப்பிடும் பஜ்ஜி,போண்டா, சமோசா என்று பல விதமான ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிடுவோம். பஜ்ஜி என்றவுடன் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி,உருளைக்கிழங்கு பஜ்ஜி என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் கொஞ்சம் வெரைட்டியாக சாப்பிட பீட்ரூட் வைத்து சத்தான பீட்ரூட் பஜ்ஜி செய்வ உள்ளோம்.

இதனை பள்ளி முடித்து அயர்ந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பீட்ரூட் போன்ற
காய்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதகர் தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

வாருங்கள்! டேஸ்ட்டான பீட்ரூட் பஜ்ஜி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் - 100 கிராம்
  • கடலை மாவு - 1 கப்
  • அரிசி மாவு - 1 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
  • பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
  • பெருங்காயம் - சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவிற்கு
  • எண்ணெய் - தேவையான அளவிற்கு

இன்று டின்னருக்கு இந்த முட்டை கொத்து தோசையை செய்து பாருங்க!


செய்முறை:

முதலில் பீட்ரூட்டின் தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து அதில் வெட்டிய பீட்ரூட்களை வைத்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் பேக்கிங் சோடா, காஷ்மீரி மிளகாய்த்தூள், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்தாக அதில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து க் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு, பீட்ரூட் வில்லைகளை கடலை மாவு கலவையில் டிப் செய்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு அடுப்பின் தீயினை குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பஜ்ஜி ஒரு புறம் உப்பி வந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். சூடான பீட்ரூட் பஜ்ஜி ரெடி! இதே மாதிரி அனைத்து பீட்ரூட்களையும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

Follow Us:
Download App:
  • android
  • ios