அடிக்கும் வெயிலுக்கு சில்லென்று “வாழைப்பழ ஸ்மூத்தி” செய்து சாப்பிடலாம் வாங்க!

வாருங்கள்! சில்லென்ற வாழைப்பழ ஸ்மூத்தி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் 
 

How to make Banana Smoothie in Tamil

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதில் அதிகளவு மக்னிசியம் மற்றும் பொட்டாசியம் காணப்படுவதால் உடலுக்கு பல விதங்களில் நன்மையை தருகிறது. ஒரு சிலர் உணவுகளை சாப்பிட நேரமில்லையென்றால் சட்டென்று 2 வாழைப்பழத்தை சாப்பிட்டு பசியாறுவார்கள். வாழைப்பழமானது அனைத்து சீசன்களிலும் கிடைக்கக் கூடிய ஒரு பழமாகும் . மேலும் மலிவான விலையில் நிறைந்த சத்துக்களையும் தருகின்றது. அத்தகைய வாழைப்பழத்தை வைத்து ஸ்மூத்தி ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம்.

இனி கோடை காலம் வர உள்ளதால் இதனை வீட்டில் செய்து சில்லென்று பரிமாறினால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.இதனை ஒரு க்ளாஸ் சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் நாம் உற்சாகமாக இருக்கலாம். மேலும் அன்றைய தினத்திற்கு தேவையான புரதமும் நமக்கு கிடைத்து விடும். மேலும் வீட்டில் இருக்கும் செல்லக் குட்டிஸ்கள் இதனை அடிக்கடி செய்து தரும்படி அன்புக்கு கட்டளை இடுவார்கள். இதனை செய்ய மிகக் குறைந்த நேரமே ஆகும் என்பதால் நாம் எப்போது வேண்டுமானாலும் செய்து ருசிக்கலாம்.

வாருங்கள்! சில்லென்ற வாழைப்பழ ஸ்மூத்தி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

பழுத்த வாழைப்பழம் - 3
தேன் - 1 ஸ்பூன்
முந்திரி -5
பிஸ்தா-5
உலர் திராட்சை-10
ஐஸ் கட்டிகள்-10
வெண்ணிலா எசன்ஸ்-1 /2 ஸ்பூன்
யோகர்ட் -1 கப்
ஏலக்காய்த் தூள்-1 சிட்டிகை
உப்பு- 1 சிட்டிகை 

ஹெல்த்தி லன்ச் ரெசிபி-பாசிப்பயறு சாதம்! செய்யலாம் வாங்க!
செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை ஒரே மாதிரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி அதில் முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை ஆகியவை சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பிளெண்டரில் வெட்டி வைத்துள்ள வாழைப்பழம், முந்திரி பாதாம், திராட்சை மற்றும் தேன் ஆகியவை சேர்த்து பேஸ்ட் போன்று செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பௌலில் எடுத்து அதில் யோகர்ட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் சிறிது ஏலக்காய்த் தூள் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் வாழைப்பழ ஸ்மூத்தியை ஒரு கண்ணாடி க்ளாசில் ஊற்றி அதன் மேல் சில வாழைப்பழ துண்டுகள் மற்றும் பொடித்த பிஸ்தாவை தூவி பரிமாறினால் வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios