கல்யாண வீட்டு அவியல்! வீட்டுல செய்யலாம் வாங்க!
நாகர்கோயில், திருநெல்வேலி மற்றும் கேரளாவில் அவியல் மிக பிரபலமான ஒரு சைடு டிஷ் ஆகும். இந்த அவியல் கண்டிப்பாக அந்த ஊர்களில் நடைபெறும் திருமண விழாக்களில் மற்றும் விசேஷங்களில் மதிய உணவில் இடம் பெற்று இருக்கும். இந்த அவியலில் இறுதியாக சேர்க்கும் தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை இதன் சுவையை அதிகரிக்கும். இந்த கல்யாண வீட்டு அவியலை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
அவியல் என்றால் அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து செய்யப்படும் ஒரு கூட்டு ஆகும். எனவே இது உடலுக்கு மிகவும் நல்லது. இதனை காரக் குழம்பு அல்லது புளிகுழம்புக்கு நல்ல ஒரு சைடு டிஷ்ஸாக இருக்கும். அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் இதன் சுவை சற்று தூக்கலாக இருக்கும். இதனை சிறிய குழந்தைகள் முதல் முதியர்வர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு. எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க!
தேவையான பொருள்கள்:
சேனைக்கிழங்கு -100கிராம் (பழைய கிழங்கு)
உருளைக்கிழங்கு - 1
வாழைக்காய் - 1
முருங்கைக்காய் - 8 துண்டுகள்
கத்திரிக்காய்- 2
கேரட் - 1
பட்டாணி- 50கிராம்
மாங்காய் - 1/2
பீன்ஸ்-50 கிராம்
கறிவேப்பில்லை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
தயிர்-4 ஸ்பூன்
Jackfruit Seed: அற்பதப் பலன்களை அள்ளித் தரும் பலாக் கொட்டைகள்!
அரைக்க:
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்த் துருவல் - 8 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்-4
கறிவேப்பில்லை - ஒரு கொத்து
செய்முறை
அனைத்து காய்களையும் சம அளவில் வெட்டி தண்ணீரில் உப்பு சேர்த்து வேக விட வேண்டும்.10 நிமிடங்களுக்கு பிறகு எல்லா காய்களும் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின் மிக்சி ஜாரில் வெங்காயம், தேங்காய், சீரகம் மற்றும் மிளகாய் சேர்த்து சிறிது நீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
Sweet corn Masal vada : பருப்பு சேர்க்காமல் மசால் வடை செய்வோமா?
அடுப்பில் ஒரு கடாயை மிதமான தீயில் வைத்து அதில் அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விட்டு அதனுடன் வேகவைத்து எடுத்துள்ள காய்களை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கலவை கொஞ்சம் சிறிது கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். அடுத்து ஒரு pan வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கருவேப்பிலை போட்டு தாளித்து கலவையில் சேர்த்து கிளறி விட்ட பின் கெட்டி தயிரை சேர்த்து கிளறினால் சுவையான கல்யாண வீட்டு அவியல் ரெடி!