Sweet corn Masal vada : பருப்பு சேர்க்காமல் மசால் வடை செய்வோமா?

ஆரோக்கிய பலன்களை தரும் ஸ்வீட் கார்னில் செய்யப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ஸ்னாக்ஸ் தான் இந்த மசால் வடை! அந்த வகையில் இன்று நாம் வீட்டிலேயே மிக எளிமையாக மற்றும் சுவையான மசால் வடையை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 
 

How to make Sweet corn Masal vada in Tamil

மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு ஏற்ற வகைகளில் பஜ்ஜி, போண்டா போன்ற பல ரெசிப்பிள் உள்ளன.அந்த வகையில் இன்று நாம் ஸ்வீட் கார்னை வைத்து மசால் வடையை செய்ய உள்ளோம். பள்ளியில் இருந்து டயர்டாக வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சத்தான ரெசிபியை செய்து கொடுங்கள்.அதிக ஆரோக்கிய பலன்களை தரும் ஸ்வீட் கார்னில் செய்யப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ஸ்னாக்ஸ் தான் இந்த மசால் வடை! அந்த வகையில் இன்று நாம் வீட்டிலேயே மிக எளிமையாக மற்றும் சுவையான மசால் வடையை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

சுவீட் கார்னில் அதிக அளவில் வைட்டமின்கள், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்றவை இருப்பதால் அவை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

வெயிட் லாஸ் செய்ய பெஸ்ட் சாய்ஸ் - சுரைக்காய் தோசை !

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கான் – 2 கப் (வேக வைக்காதது)
பச்சை மிளகாய் – 3,
வரமிளகாய் – 2, 
இஞ்சி – 1 இன்ச்(தோல் சீவி நறுக்கியது )
பூண்டு – 5 பல் (தோலுரித்தது )
அரிசி மாவு – 2 ஸ்பூன்,
மிளகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1 கப் ( பொடியாக நறுக்கியது)
சிறு கீரை – 1 கப் ( பொடியாக நறுக்கியது)
புதினா - சிறிது 
உப்பு தேவையான அளவு 
எண்ணெய் தேவையான அளவு 
பெருங்காய தூள்- 2 சிட்டிகை 

செய்முறை:

ஒரு மிக்சி ஜாரில் ஸ்வீட் கார்ன், பச்சை மிளகாய், வர மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நீர் சேர்க்காமல் கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.

குழந்தைகள் விரும்பும் சோயா கட்லெட்!- ஹெல்தியான ஈவினிங் ஸ்னாக்ஸ்!

பின் இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய சிறு கீரை , புதினா, பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். (சிறு கீரை இல்லை என்றால் முருங்கை கீரையை சேர்க்கலாம்)

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் , மிதமான தீயில் வைத்து மாவை மீடியம் அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். அவ்ளோ தாங்க . கிரிஸ்பியான , சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்வீட் கார்ன் வடை ரெடி! ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்னாக்ஸாக இது இருக்கும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios