கொட்டும் மழையில் டேஸ்டான "க்ரிஸ்பி பிரெட் சீஸ் பைட்ஸ்" செய்து சாப்பிடலாம் வாங்க!

வாருங்கள்! இன்று நாம் பிரெட் சீஸ் பைட்ஸ் ரெசிபியை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to do Bread Cheese Bites in Tamil

மழையின் காரணமாக தமிழகத்தில் பல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய விதமாக ஒரு ரெசிபியை சுட சுட செய்து கொடுத்தால் அமைதியாக அமர்ந்து சாப்பிடுவார்கள். 

வீட்டில் உள்ள பிரெட் வைத்து ருசியான ஒரு ரெசிபியை வெறும் 10 நிமிடங்களில் செய்து விடலாம்.பிரெட் வைத்து பிரெட் டோஸ்ட், பிரெட் ரோல், பிரெட் கட்லெட் போன்றவற்றை செய்து சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் பிரெட் சீஸ் பைட்ஸ் ரெசிபியை காண உள்ளோம். 

இதனை குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்கள் கூட விரும்பி சாப்பிடக் கூடிய அளவில் இதன் சுவை சூப்பராக இருக்கும். வாருங்கள்! இன்று நாம் பிரெட் சீஸ் பைட்ஸ் ரெசிபியை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் : 

பிரட் - 4
பிரெட் க்ரம்ஸ்  - 1/2 கப் 
சீஸ் துருவல் -4 ஸ்பூன் 
கார்ன் பிளார்-3 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு 

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் : சத்தான "வெஜிடேபிள் வடை" இப்படி செய்து தாங்க

செய்முறை: 

முதலி பிரெட்டின் நான்கு ஓரங்களையும் நீக்கி விட வேண்டும். பின் பிரெட்டின் இரு எதிர் முனைகளில் இருந்து வெட்டி முக்கோண வடிவமாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பிரெட் துண்டில் 2 முக்கோண வடிவங்கள் கிடைக்கும்.

சீஸை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தட்டில் அல்லது பௌலில் பிரெட் க்ரம்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் கார்ன் பிளார் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ள வேண்டும். 

ஒரு முக்கோண வடிவ துண்டில் துருவி வைத்துள்ள சீஸை தூவி விட்டு பின் அதன் மேல் மற்றொரு முக்கோண வடிவ பிரெட் துண்டை வைக்க வேண்டும்.

இப்போது சீஸ் வைத்து நிரம்பியுள்ள பிரெட் துண்டினை கார்ன் பிளார் கரைசலில் டிப் செய்து விட்டு, பின் பிரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதே போன்று அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் காய்ந்த பின் செய்து வைத்துள்ள பிரெட்டை போட வேண்டும். தீயினை சிம்மில் வைத்து ப்ரெட்டின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வைத்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான் ! டேஸ்ட்டான பிரெட் சீஸ் பைட்ஸ் ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios