Asianet News TamilAsianet News Tamil

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் : சத்தான "வெஜிடேபிள் வடை" இப்படி செய்து தாங்க

வழக்கமாக மெது வடை, பருப்பு வடை, மசாலா வடை, கீரை வடை என்று செய்திருப்போம்.ஆனால் இன்று நாம் வெஜிடேபிள்ஸ் வைத்து ருசியான ஒரு வடையை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How To make Vegetable Vada in Tamil
Author
First Published Dec 10, 2022, 9:14 AM IST

குளிர்காலத்தில் பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு சுட சுட ஒரு ரெசிபியை செய்து தர வேண்டுமா? அந்த ரெசிபி ஆரோக்கியமான சத்தான ரெசிபியாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். 

காய்கறிகளை வைத்து பிரியாணி, கிச்சடி, சூப், குருமா போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். அத்தகைய காய்கறிகளை வைத்து இன்று வித்தியாசமான அதே நேரத்தில் சத்தான ஒரு ரெசிபியை பார்க்க உள்ளோம். என்ன ரெசிபி என்று யோசிக்கிறீர்களா? சத்தான வெஜிடேபிள் வடை ரெசிபியை தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். 

இந்த வடையை ஒரு முறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் கூட இதனை விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை அருமையாக இருக்கும். 

வழக்கமாக மெது வடை, பருப்பு வடை, மசாலா வடை, கீரை வடை என்று செய்திருப்போம்.ஆனால் இன்று நாம் வெஜிடேபிள்ஸ் வைத்து ருசியான ஒரு வடையை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு- 1கப் 
துவரம் பருப்பு-1 கப் 
வெங்காயம்-1
கார்ன் பிளார்-2 ஸ்பூன் 
இஞ்சி-1 இன்ச் 
வர மிளகாய்-2
கோஸ் -1 கப்
கேரட்-1
பீன்ஸ்-1/2 கப் 
கறிவேப்பிலை-1கொத்து
மல்லித்தழை-கையளவு
பெருங்காயத்தூள்-2 சிட்டிகை 
உப்பு -தேவையான அளவு 
எண்ணெய்-தேவையான அளவு 

வீட்டில் விசேஷமா? அப்போ இந்த ஹல்வாவை ஒரு முறை செய்து அசத்துங்க!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இரண்டு பருப்புகளையும் சேர்த்து 2 முறை அலசி, பின் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பீன்ஸ், கோஸ் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை , மல்லித்தழையை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். 

3 மணி நேரம் சென்ற பிறகு,பருப்பினை தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொண்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் மாற்றிக் கொள்ள வேண்டும். மிக்சி ஜாரில் சோம்பு,இஞ்சி, வர மிளகாய், உப்பு , பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் கார்ன் பிளார், அரிந்து வைத்துள்ள பீன்ஸ், கோஸ், வெங்காயம்,கேரட், கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின் அதில் பிசைந்த மாவினை கையில் கொஞ்சமாக எடுத்து வடையாக தட்டி போட்டு, எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான வெஜிடேபிள் வடை ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios