வெறும் 10 நிமிடத்தில்.. இட்லி தோசைக்கு டேஸ்ட்டான உளுந்தம் பருப்பு சட்னி.. ரெசிபி இதோ!
Ulunthu Chutney Recipe : இந்த கட்டுரையில் உளுந்தம் பருப்பு சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தினமும் காலை இட்லி தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியானால், உங்களுக்கான பதிவு தான் இது. உங்கள் வீட்டில் உளுந்தம் பருப்பு இருந்தால் அதில் ருசியான சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த உளுந்தம் பருப்பு இட்லி தோசையுடன் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். மேலும், இந்த சட்னி செய்வது ரொம்பவே சுலபம். முக்கியமாக இந்த சட்னி ஆரோக்கியமானதும் கூட. குறிப்பாக பெண்களுக்க. ஆம், அடிக்கடி இந்த சட்னியை செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் எலும்பு வலுவாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் உளுந்தம் பருப்பு சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உடல் எடை டக்குனு குறையணுமா? அப்ப உடனே இந்த சட்னி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்!
உளுந்தம் பருப்பு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
உளுந்தம் பருப்பு - 3 ஸ்பூன்
வரமிளகாய் - 5
புளி - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 3
தக்காளி - 1
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: இட்லி தோசைக்கு ஒரு முறை இந்த சட்னி வச்சி கொடுங்க.. எக்ஸ்ட்ரா ரெண்டு சாப்பிடுவாங்க..!
செய்முறை:
உளுந்தம் பருப்பு சட்னி செய்ய முதலில், ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் அதில், எடுத்து வைத்த உளுந்தம் பருப்பை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய், சிறிதளவு புளி எடுத்து அதிலிருந்து விதை நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வதக்கியதை இப்போது ஒரு தட்டில் தனியாக எடுத்து ஆற வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அதே கடாயை அடுப்பில் வைத்து அதில் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கி பிறகு அதில் பூண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பிறகு இவற்றையும் தனியாக ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும் வதக்கிய பொருட்கள் அனைத்தும் நன்கு ஆரியதும் அவை எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த சட்டினியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.
இப்போது மற்றொரு கடையை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு பிறகு அதை சட்டினி மேல் ஊற்றி ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் டேஸ்ட்டான உளுந்தம் பருப்பு சட்னி ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D