இட்லி தோசைக்கு ஒரு முறை இந்த சட்னி வச்சி கொடுங்க.. எக்ஸ்ட்ரா ரெண்டு சாப்பிடுவாங்க..!

Onion Peanut Chutney Recipe : இந்த கட்டுரையில் வெங்காயம் வேர்கடலை வைத்து சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

easy and tasty onion peanut chutney recipe in tamil mks

இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய போறீங்களா? அப்படியென்றால், எப்போதும் போல சட்னி செய்யாமல், ஒரு முறை வித்தியாசமான முறையில், சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கக்கூடிய ஒரு சட்னி செய்து சாப்பிடுங்கள். அப்படி என்ன செய்வது என்று தெரியவில்லையா? உங்களுக்கான பதிவு தான் இது.

உங்கள் வீட்டில் வெங்காயமும், வேர்கடலையும் இருந்தால் அதில் டேஸ்டான சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த சட்னி சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சட்னியை நீங்கள் இட்லி தோசை மட்டுமின்றி, சப்பாத்தி, சூடான சாதத்தில் கூட வைத்து சாப்பிடலாம். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் வெங்காயம் வேர்கடலை வைத்து சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

வெங்காயம் வேர்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
மல்லி - 1 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
வரமிளகாய் - 3
புளி - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
இந்த வெங்காயம் வேர்கடலை சட்னி செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்த வேர்க்கடலையை போட்டு நன்கு வறுக்கவும். பிறகு அதை ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.  இப்போது அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மல்லி, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அவறை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.

இதனை அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வேர்க்கடலையை போட்டு நன்கு பொடியாக அரைக்கவும். பிறகு இதில் வதைக்க பொருட்களையும் சேர்த்து நன்கு அரைக்கவும் . இப்போது இதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைக்கவும். தண்ணீரை அதிகமாக சேர்க்க வேண்டாம். இப்போது அரைத்த சட்னியை ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  இதை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். தாளித்ததை சட்டினியுடன் சேர்த்து கிளறவும். இந்த சட்டினியை நீங்கள் தாளிக்காமலும் கூட அப்படியே சாப்பிடலாம். அவ்வளவுதான் வெங்காய வேர்கடலை சட்னி ரெடி. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios