உடல் எடை குறையனுமா? உங்களுக்கான சத்தான தோசை.. டேஸ்ட் செமையா இருக்கும்!

Oats Beetroot Masala Dosai Recipe : உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சுவையான மற்றும் சத்தான ஓட்ஸ் பீட்ரூட் மசாலா தோசை. ரெசிபி உள்ளே..

healthy and tasty oats beetroot masala dosai recipe in tamil mks

நீங்கள் தோசை பிரியர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம், நீங்கள் எப்போதும் சாப்பிடும் தோசை அல்லாமல், சற்று வித்தியாசமான சுவையில், கூடவே ஆரோக்கியம் நிறைந்த தோசை குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். அது வேற ஏதும் இல்லைங்க ஓட்ஸ் பீட்ரூட் மசாலா தோசை தான். 

இந்த தோசையை இதுவரை நீங்கள் சாப்பிடவில்லை என்றால், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். இந்த ஓட்ஸ் பீட்ரூட் மசாலா  தோசையானது சாப்பிடுவதற்கு சற்று வித்தியாசமான சுவைகள் மிகவும் ருசியாக இருக்கும். இந்த தோசை செய்வதற்கு அதிக நேரம் தேவையில்லை, சுலபமான முறையில் செய்து விடலாம். முக்கியமாக, உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த தோசை ரொம்பவே பெஸ்ட். காரணம், பீட்ரூட் மற்றும் ஓட்ஸில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த தோசை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் ஓட்ஸ் பீட்ரூட் மசாலா தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  "பீட்ரூட் தோசை" ரெசிபி..இது இரத்தத்தை வேகமாக அதிகரிக்கும்..!!

ஓட்ஸ் பீட்ரூட் மசாலா தோசை செய்ய தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1 கப்
ரவை - 1 கப்
பீட்ரூட் - 2 (சின்னதாக நறுக்கியது)
பன்னீர் - 1 கப் (துருவியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  குழந்தைக்கு காலை உணவாக 'பீட்ரூட் இட்லி' செஞ்சு கொடுங்க.. சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்!

செய்முறை :

ஓட்ஸ் பீட்ரூட் மசாலா தோசை செய்ய முதலில், அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து மசியும் வரை வதக்கவும். பிறகு அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பின் அதில் 1/2 கப் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் துருவிய பன்னீரை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். இப்போது தோசைக்கான பன்னீர் மசாலா தயார்.

இப்போது மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எடுத்து வைத்த ஓட்ஸை நன்றாக வறுத்து தனியாக ஒரு தட்டில் போட்டு ஆற வையுங்கள். பின் அதே கடாயில் ரவையையும் சேர்த்து அதையும் மற்றொரு தட்டில் வைத்து ஆற வையுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் ஓட்ஸ் ரவை பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும். இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் தோசை சுடுவதற்கான மாவு தயார்.

இதனை அடுத்து ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் தடவி சூடானதும் தயாரித்து வைத்த மாவை அதன் மேல் ஊற்றவும். பிறகு ஏற்கனவே தயாரித்து வைத்த பன்னீர் மசாலாவை தோசை மாவின் மேல் வைக்கவும். பிறகு இரண்டு பக்கமும் பிரட்டி போட்டு வேகவைத்து எடுத்தால் டேஸ்டான ஓட்ஸ் பீட்ரூட் மசாலா தோசை ரெடி. இந்த தோசைக்கு நீங்கள் கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios