கோடைக்காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா !
அப்படி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுவதில் நுங்கும் ஒன்றாகும்.நுங்கை கோடைக்காலத்தில் எடுத்துக் கொள்வதால் என்னென்ன பயன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இத்தகைய சூழலில் நம் உடம்பினை நாம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பல்வேறு உணவுகளை தேர்வு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுவதில் நுங்கும் ஒன்றாகும். இதனை பிடிக்காது என்று சொல்பவர்கள் எவரும் இல்லை. இதன் சுவை அலாதியாக இருக்கும். இதில் அதிகப்படியான நீர்சத்துக்கள் உள்ளதால் கோடை காலத்தில் நமது உடலை குளிச்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் துணை புரிகிறது.
நீரழிவு நோயினால் பாதித்தவர்கள் நுங்கு ஒரு சிறந்த உணவாக எடுத்துக் கொள்ளலாம். இதில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகளவில் காணப்படுகிறது. தவிர இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி, ஜிங்க் ,பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் நம் அன்றாட உடல் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் ஆகும்.
வயிற்றுப் பிரச்சனைகளுக்கு தீர்வு:
கோடை வெப்பத்தில் நமது உடலில் நீர்ச்சத்தினை தக்க வைத்துக் கொள்ள பனை நுங்கு மிகச் சிறந்த ஒன்றாகும். நுங்கானது உடலின் இழந்த ஊட்டசத்துக்கள் மற்றும் தாதுக்களை சரி சேட்டும் திறன் பெற்றது. வெயில் காலங்களில் சிலருக்கு சிறுநீர் செல்லும் போது எரிச்சல் அல்லது சிறுநீர் தொற்று போன்றவை ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது. தவிர அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் சோர்வை தடுத்து புத்துணர்ச்சியை தருகிறது. நுங்கு அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவு என்றாலும் , குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகளில் நுங்கும் ஒன்று. இதனை சாப்பிடுவதால் செரிமானம் அதிகரிப்பதுடன், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்றவைகளில் இருந்து விடுபட செய்கிறது.
அடுத்த முறை சிக்கன் வாங்கும் போது இந்த மாதிரி தனியா சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்க!
உடலுக்கு குளிர்ச்சி தரும்:
இது ஒரு இயற்கையான குளிர்ச்சத தன்மை கொண்ட பழமென்பதால் உடலினை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தவிர கோடை நேரங்களில் உடல் சூடு, நீரிழப்பு, வறண்ட மேனி, சிறுநீரக தொற்று அல்லது எரிச்சல் போன்ற பல்வேறு விதமான வெப்ப சூட்டினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைத் தடுப்பதில் வல்லது. இது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்வது மட்டுமல்லாமல், அதிகப்படியான வியர்வையால் இழக்கப்படும் ஊட்டச்சத்துக்களை மீட்டு தருகிறது. நுங்கு உங்கள் தாகத்தைத் தீர்த்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது.
எடையைக் குறைக்கிறது:
நுங்கு குறைந்த கலோரி நிறைந்த கொண்ட ஒரு பழ வகையாகும். இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.இதிலுள்ள அதிக நீர்ச்சத்து காரணத்தினால் வயிற்றை நீண்ட நேரம் வரை முழுமையாக வைகாக் செய்கிறது. இதனை எடுத்துக் கொண்டால் சரியான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.