Asianet News TamilAsianet News Tamil

அடுத்த முறை சிக்கன் வாங்கும் போது இந்த மாதிரி தனியா சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்க!

வாருங்கள்! வீடே கமகமக்கும் தனியா சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Delicious Coriander Chicken Recipe in Tamil
Author
First Published Mar 20, 2023, 10:47 AM IST

அசைவ பிரியர்கள் அனைவருக்கும் சிக்கன் என்றால் போதும் வேறு எதையும் தேட மாட்டார்கள். சிக்கன் வைத்து பட்டர் சிக்கன், சிக்கன் மசாலா, சில்லி சிக்கன், தந்தூரி சிக்கன் என்று இன்னும் பல்வேறு விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் சிக்கன் வைத்து அட்டகாசமான தனியா சிக்கன் ரெசிபியை செய்ய உள்ளோம்.

இதன் சுவை தாறுமாறாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை செய்தால் இனி எப்பொழுதும் இதனையே செய்து தரும் படி சொல்லுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை பேசும்.

வாருங்கள்! வீடே கமகமக்கும் தனியா சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
 சிக்கன் -1 கிலோ
வெங்காயம் -3
இஞ்சி, பூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மல்லித்தழை -2கட்டு
புதினா இலை -1/2 கட்டு
தயிர் -1/4 லிட்டர்
சீரகத்தூள் 1 1/2 ஸ்பூன்
தனியா தூள் 3 ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

3 முறை சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை இப்படி செய்து பாருங்கள்!தரித்திரம் அனைத்தும் வீட்டை விட்டு ஓடி விடும்,

செய்முறை:

முதலில் சிக்கனை சுத்தம் செய்து கொண்டு அலசி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிது தயிர் ,உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயத்தை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மல்லித்தழை மற்றும் புதினாவை அலசி வைத்து சிறிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும். அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். பின்னர் சீரகம், பச்சைமிளகாய், தனியா தூள் ஆகியவை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

புதினா மற்றும் மல்லித் தழையை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை கடாயில் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

மல்லியின் பச்சை வாசனை சென்ற பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். சிறிது தண்ணீர் மற்றும் தயிர் விட்டு ஒரு தட்டு போட்டு மூடி வேக விட வேண்டும். சிக்கன் வெந்து கிரேவி பதத்திற்கு வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறினால் தனியா சிக்கன் ரெடி!

 

Follow Us:
Download App:
  • android
  • ios