Asianet News TamilAsianet News Tamil

Benefits of Cashews: முந்திரி சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்குமா? வாங்க தெரிஞ்சிகலாம்..!!

முந்திரி சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகளை குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

health benefits of consuming cashew nuts
Author
First Published Jul 18, 2023, 4:45 PM IST

முந்திரி நட்ஸ் வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முந்தியை இந்தியர்கள் அதிக ஆர்வத்துடன் சாப்பிடுவர். ஆனால் பலர் இதை அதிகம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் அது சாத்தியமா, இதுகுறித்து நாம் இங்கு பார்க்கலாம். 

முந்திரி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?
நட்ஸ்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் சிலர் அது கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று பயப்படுகிறார்கள். இது வெறும் கட்டுக்கதை, இதில் எந்த உண்மையும் இல்லை என்று சொல்லலாம்.

முந்திரியில் காணப்படும் சத்துக்கள்:
முந்திரியில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாமிரம், மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம், தயாமின், வைட்டமின் பி6, வைட்டமின் கே, இரும்பு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. ஆனால் அதில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், முந்திரி சத்துக்களின் பொக்கிஷம் என்று அழைக்கப்படுகிறது.

முந்திரி பருப்பு இதயத்திற்கு நல்லது:
முந்திரி சாப்பிடுவதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும், அதனுடன், கால் பிடிப்பும் நீங்கும். இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: ஞாபக மறதியா? உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..

முந்திரி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

  • நட்ஸ்கள் சருமத்திற்கு நல்லது மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது.
  • முந்திரி சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. எனவே படிக்கும் மாணவர்கள் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • முந்திரி உயர் இரத்தத்திற்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. குறிப்பாக இது மன அழுத்தம் நோயாளிகளுக்கு சிறந்தது. 
  • முந்திரி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால்  உடலுக்கு சக்தி கிடைப்பதுடன் எலும்புகளும் வலுவடையும்.
  • முந்திரியில் தாமிரம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. மேலும் இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது.
Follow Us:
Download App:
  • android
  • ios