இனிமே 7 மணிக்கே டின்னர் சாப்பிட வேண்டியது தான்.. பல ஆரோக்கிய நன்மைகள் இருக்காம்..

இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால் எடை இழப்பு, கொழுப்பை கரைப்பது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது வரை பல நன்மைகளை பெறலாம்

Eating Dinner Before 7 pm will give many health benefits

ஒரு நாளின் காலை உணவு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு அன்றைய நாளின் இரவு உணவும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம்.. உங்கள் இரவு உணவை எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது முக்கியம். இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால் எடை இழப்பு, கொழுப்பை கரைப்பது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது வரை பல நன்மைகளை பெறலாம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் உணவின் நேரமும் முக்கியமானது. இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுவதால், செரிமானம் முதல் சிறந்த தூக்கம் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்க முடியும்.

செரிமானம் மேம்படும்

இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது, நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உணவை ஜீரணிக்க உங்கள் உடலுக்கு போதுமான நேரத்தை வழங்குகிறது. நீங்கள் தூங்க செல்வதற்கு முன், சாப்பிடும் போது, உங்கள் உடல் உணவை திறம்பட செயலாக்க முடியாமல் திணறலாம், இது செரிமான அசௌகரியம் அல்லது தூக்கத்தை சீர்குலைக்கும்.

தூக்கத்தின் தரம் மேம்படும்

தூங்குவதற்கு சற்று முன் இரவு உணவை உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். இதனால் தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டால், ஆழ்ந்த, அதிக புத்துணர்ச்சியூட்டும் தூக்கம் எளிதாக கிடைக்கிறது.

உங்கள் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்பதைக் குறிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் இவை தான்..

எடை மேலாண்மை

இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது எடை மேலாண்மைக்கு உதவும். இர்வில் லேட்டாக சாப்பிடுவதால் அதிக சாப்பிடுவதற்கு அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு வழிவகுக்கிறது. ஆனால் இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டால், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடும் வாய்ப்புகள் குறைவு.

உடலின் கடிகாரத்துடன் ஒத்திசைத்தல்

நமது உடல்கள் ஒரு சர்க்காடியன் தாளத்தில் இயங்குகின்றன, இது இயற்கையான உள் கடிகாரம், இது தூக்கம்-விழிப்பு சுழற்சிகள், ஹார்மோன் உற்பத்தி மற்றும் பிற உடலியல் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது. எனவே சீரான முறையில் சாப்பிடுவது என்பது ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

நெஞ்செரிச்சல் குறையும்

தூங்க செல்லும் நேரத்துக்கு முன் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. சாப்பிட்ட உடனேயே தூங்க செல்வதால் வயிற்றில் உள்ள அமிலங்கள், உணவுக்குழாயில் மீண்டும் பாய்ந்து, அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.

வளர்சிதை மாற்றம்

சீக்கிரமே இரவு உணவு சாப்பிடுவதால், அடுத்த நாள் காலை உணவுக்கு நீண்ட இடைவெளியை வழங்குகிறது, இது இயற்கையாகவே இடைப்பட்ட உண்ணாவிரதத்தை அனுமதிக்கிறது. இந்த நீண்ட இடைவெளி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

மறுப்பு: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios