Pottukadalai Sambar Recipe : இட்லி தோசைக்கு சுவையான பொட்டுக்கடலை சாம்பார் செய்வது எப்படி என்று இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

காலையில இட்லி தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரியான சைடிஷ் தான் செய்து சாப்பிடுறீங்களா? வித்தியாசமான சுவையில் ஏதாவது செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. ஆம், உங்களுக்கு கையேந்தி பவன் பொட்டுக்கடலை சாம்பார் பிடிக்குமா? அப்படியானால் ஒருமுறை இட்லி தோசைக்கு கையேந்தி பவன் ஸ்டைலில் பொட்டுக்கடலை சாம்பார் செய்து சாப்பிடுங்கள். இந்த சாம்பார் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது இந்த பதிவில் பொட்டுக்கடலை சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: இட்லி தோசைக்கு ஹோட்டல் ஸ்டைலில் சுவையான இட்லி சாம்பார்.. ரெசிபி இதோ!

பொட்டுக்கடலை சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை - 1 ஸ்பூன் 
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 10 
தக்காளி - 3 (நறுக்கியது)
பூண்டு - 5
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
சாம்பார் தூள் - 1 1/2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன் 
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன் 
அரிசி மாவு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 3/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு 
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
நெய் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க: பருப்பு இல்லாமல் மணக்க மணக்க இட்லி சாம்பார் இப்படி செய்ங்க.. சுவை வேற லெவல்ல இருக்கும்!

செய்முறை: 

பொட்டுக்கடலை சாம்பார் செய்ய முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், சாம்பார் தூள், பெருங்காயத்தூள் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடி சுமார் இரண்டு விசில் வைத்து பிறகு இறக்கவும்.

குக்கரில் விசில் போனதும் அதில் இருக்கும் தண்ணீரை வடித்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, வேக வைத்ததை நன்கு ஆரியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பொட்டுக்கடலையையும் பொடியாக அரைக்கவும். அதனுடன் அரிசி மாவு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். முக்கியமாக கட்டிகள் என்று அரைக்கவும். 

இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் பிறகு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் சிறிதளவு தண்ணீரையும் ஊற்றி ஒரு முறை கொதிக்க விடவும். பிறகு அதில் அரைத்த பொட்டுக்கடலை சேர்க்கவும். இப்போது ஏற்கனவே தனியாக எடுத்து வைத்த மசாலாவின் தண்ணீரையும் இதில் ஊற்றி ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு சிறிதளவு வெல்லம், பெருங்காயத்தூள் மற்றும் சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து சசிறுது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் நெய் ஊற்று பரிமாறுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான கையேந்தி பவன் பொட்டுக்கடலை சாம்பார் ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D