Asianet News TamilAsianet News Tamil

இட்லி தோசைக்கு ஹோட்டல் ஸ்டைலில் சுவையான இட்லி சாம்பார்.. ரெசிபி இதோ!

Hotel Style Idli Sambar Recipe : இந்த கட்டுரையில் ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

hotel style idli sambar recipe in tamil mks
Author
First Published Aug 9, 2024, 6:30 AM IST | Last Updated Aug 9, 2024, 6:30 AM IST

இன்னைக்கு காலையில உங்க வீட்ல இட்லி அல்லது தோசை செய்ய போறீங்களா? அப்படியானால் அதற்கு சைடு டிஷாக ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பார் செஞ்சு கொடுங்க. இந்த இட்லி சாம்பார் பருப்பு மற்றும் பல வகையான காய்கறிகளால் செய்யப்படுவதால், சாப்பிடுவதற்கு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த இட்லி சாம்பார் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். இந்த சாம்பாரை நீங்கள் தோசை இட்லி மட்டுமின்றி, பொங்கல், உப்புமா, வடை ஆகியவற்றுடன் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். இப்படி சுவைமிக்க இந்த ஆரோக்கிய சம்பாரை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  இட்லி தோசைக்கு ஒருமுறை இந்த குருமா செஞ்சு சாப்பிடுங்க.. செம்மையா இருக்கும்!!

ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 10
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கத்தரிக்காய் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
புளி கரைசல் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 8 (நீளமாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  இட்லி தோசைக்கு இனி சாம்பார் சட்னி செய்யாம..ஒருமுறை கும்பகோணம் கடப்பா செஞ்சு பாருங்க.. ருசியா இருக்கும்!

செய்முறை:

  • முதலில் எடுத்து வைத்த பருப்பை நன்கு கழுவவும். இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில், கழுவி வைத்த துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • இப்போது அடுப்பில் ஒரு வானிலையை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயத்தை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளி மற்றும் கீறி வைத்த பச்சை மிளகாயும் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் சுவைக்கு ஏற்ப சாம்பார் பொடியை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். 
  • இப்போது நறுக்கிய கேரட், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள். காய்கறிகள் நன்கு வெந்ததும் அதில் வேக வைத்து பருப்பை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பின் நன்கு கொதிக்க வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் சுவையான ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பார் தயார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios