பருப்பு இல்லாமல் மணக்க மணக்க இட்லி சாம்பார் இப்படி செய்ங்க.. சுவை வேற லெவல்ல இருக்கும்!

இந்த கட்டுரையில் பருப்பு சேர்க்காத ரோட்டு கடை சாம்பார் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

idli sambar how to make road side idli sambar without dal recipe in tamil mks

இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி (அ) தோசை செய்யப் போகிறீர்கள் என்றால், இப்போதும் போல சாம்பார் செய்யாமல், ஒரு விதமான ஸ்டைலில் பாருப்பு இல்லாமல் சாம்பார் செய்து கொடுங்கள். என்ன பருப்பு சேர்க்காமல் ரோட்டுக்கடை சாம்பாரை செய்து கொடுங்கள். நிஜமாகவே, இந்த சாம்பார் சாப்பிடுவதற்கு ருசியாகவும் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் பருப்பு சேர்க்காத ரோட்டு கடை சாம்பார் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

ரோட்டு கடை சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
பூண்டு - 10 பல்
சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 2
வரமிளகாய் - 3
பச்சை மிளகாய் - 2
கருவேப்பில்லை - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
ரோட்டு கடை சாம்பார் செய்ய முதலில் ஒரு கடையை அடைப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வெந்ததும் இப்போது அதில் நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளியின் நன்கு வதங்கியதும் பிறகு சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் எடுத்து வைத்த பொட்டுக்கடலையை இதனுடன் சேர்த்தும் ஒரு முறை கிளறிவிட்டு கீழே இறக்கி ஆற வையுங்கள். இவை நன்கு ஆறியது மிக்ஸி ஜாரில் போட்டு சற்று கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் எடுத்து வைத்த கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளியுங்கள். அதன்பிறகு, அதில் எடுத்து வைத்த பூண்டை தட்டிப் போட்டு சிறிது கிளறிவிடுங்கள். பின்னர், வரமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கவும். வெங்காயம் நன்கு வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு அதில் சேர்க்கவும். பத்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால் ரோட்டு கடை சாம்பார் ரெடி!! சூடான இட்லி (அ) தோசையுடன் இந்த சாம்பார் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி (அ) கார சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் உங்களுக்கு அனுப்புங்கள்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios