பாகற்காயில இருக்கற கசப்ப எடுத்துட்டு சூப்பரான சமையல் பண்ணலாம். கசப்ப குறைக்க சில ட்ரிக்ஸ் இருக்கு.
பாகற்காய்: வீட்ல பாகற்காய் செஞ்சா பல பேர் முகம் சுளிப்பாங்க. குழந்தைங்க பாகற்காய் பேர கேட்டாலே ஓடிடுவாங்க. ஏன்னா, பாகற்காய் கசக்கும். அதனால பல பேர் சாப்பிட மாட்டாங்க. ஆனா ஒரு ட்ரிக் யூஸ் பண்ணா பாகற்காயோட கசப்ப எடுத்துட்டு சூப்பரா சமைக்கலாம். பாகற்காய் உடம்புக்கு ரொம்ப நல்லது. அதுல விட்டமின், மினரல்ஸ், பைபர் எல்லாம் இருக்கு. பாகற்காய் கசப்பில்லாம சமைக்க என்ன ட்ரிக்னு பாக்கலாம் வாங்க.
பாகற்காய் சமைக்க தேவையான பொருட்கள்
500 கிராம் பாகற்காய்
3 வெங்காயம்
2 தக்காளி
2 பச்சை மிளகாய்
1 எலுமிச்சை
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
1 டீஸ்பூன் எண்ணெய்
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
அரை ஸ்பூன் சீரகம்
அரை ஸ்பூன் சோம்பு
அரை ஸ்பூன் மிளகாய் தூள்
அரை ஸ்பூன் சீரகத்தூள்
அரை ஸ்பூன் கரம் மசாலா
2 ஸ்பூன் தனியா தூள்
1 ஸ்பூன் வறுத்த சோம்பு தூள்
1 ஸ்பூன் ஆம்சூர் பவுடர்
¼ ஸ்பூன் வெந்தயம்
2 சிட்டிகை பெருங்காயம்
கொஞ்சம் கசூரி மேத்தி
கொத்தமல்லி
உப்பு தேவையான அளவு
சமைக்க பாகற்காய் ரெடி பண்ணுங்க
முதல்ல பாகற்காய கழுவி வெட்டிக்கோங்க. சின்ன சின்ன ரவுண்டா வெட்டி அதுல இருக்கற விதைய எடுத்துடுங்க. அதுல 1 ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போடுங்க. கசப்ப குறைக்க 1 எலுமிச்சை சாறு புழிஞ்சு விடுங்க. நல்லா மிக்ஸ் பண்ணி 15 நிமிஷம் ஊற வைங்க. 15 நிமிஷம் கழிச்சு பாகற்காயில இருக்கற தண்ணிய நல்லா புழிஞ்சு எடுத்துடுங்க.
கெட்ட கொழுப்புக்களை இயற்கையான முறையில் குறைக்க...இதை டிரை பண்ணுங்க
பாகற்காய் சமைக்கலாம் வாங்க
ஒரு கடாயில எண்ணெய் ஊத்தி சூடு பண்ணி பாகற்காய 4, 5 நிமிஷம் வறுங்க. வறுத்ததுக்கு அப்புறம் எடுத்துடுங்க. கடாயில இருக்கற எண்ணெயில சீரகம், கருஞ்சீரகம், சோம்பு, வெந்தயம், பெருங்காயம் போடுங்க. அதுக்கப்புறம் வெட்டி வச்ச வெங்காயம், பச்சை மிளகாய், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்குங்க. இப்போ வறுத்த பாகற்காய போடுங்க. நல்லா மிக்ஸ் பண்ணிட்டு மசாலா போடுங்க. 3, 4 நிமிஷம் சிம்ல வைச்சு சமைங்க. அதுக்கப்புறம் ஆம்சூர் பவுடர், கசூரி மேத்தி போட்டு சிம்ல நல்லா சமைங்க. சமைச்சதுக்கு அப்புறம் பரிமாறுங்க. வீட்ல இருக்கறவங்க விரும்பி சாப்பிடுவாங்க.
தவறிக் கூட வாழைப்பழத்துடன் இந்த 5 உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்
