Asianet News TamilAsianet News Tamil

தொடர் தலைவலி, முடி உதிர்தல் பிரச்சனையா? அப்ப இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க!

முடி உதிர்தலுக்கும் தலைவலிக்கும் என்ன தொடர்பு, அதற்கு என்ன தீர்வு விரிவாக பார்க்கலாம்..

Constant headaches, hair loss problem? Then eat these foods regularly! Rya
Author
First Published Sep 27, 2023, 3:49 PM IST

முடி உதிர்தல் என்பது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. ஆனால் முடி உதிர்தலுக்கும் தலைவலிக்கும் தொடர்பு உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. முடி உதிர்தலுக்கும் தலைவலிக்கும் என்ன தொடர்பு, அதற்கு என்ன தீர்வு விரிவாக பார்க்கலாம்..

தலைவலிக்கும் முடி உதிர்தலுக்கும் என்ன தொடர்பு?

மோசமான ஊட்டச்சத்து குறைபாடு தான் முடி உதிர்தலுக்கும் தலைவலிக்கும் முக்கிய காரணம். உங்கள் உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதபோது, அது முடி உதிர்தல் மற்றும் தலைவலி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முடி உதிர்தலை குறைக்க என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
 

கீரை

கீரைகளில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே கீரையை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது ஆரோக்கிய முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், தலைவலி அறிகுறிகளைப் போக்குகிறது.

பாதாம்

பாதாமில் மக்னீசியம் மற்றும் பயோட்டின் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன். இது முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் தலைவலி நிவாரணம் அளிக்கும்.

தயிர்

தயிர் இந்திய உணவு வகைகளில் முதன்மையானது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் புரோபயாடிக்குகளைக் கொண்டுள்ளது. குடல் ஆரோக்கியமாக இருந்தால் முடி உதிர்வு பிரச்சனைகளை குறைக்கும். தலைவலியின் பாதிப்பும் குறைக்கும்.

கறிவேப்பிலை

இந்திய சமையலில் பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்களில் கறிவேப்பிலை முக்கியமானது. இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பி உள்ளன. முடியை வலுவாக்குவதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தலைவலியையும் குறைக்கிறது. 

சர்க்கரைவள்ளி கிழங்கு

பீட்டா கரோட்டின் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இந்த ஊட்டச்சத்து முடி ஆரோக்கியத்திற்கு முக்கியமானது மற்றும் தலைவலி ஏற்படுவதைக் குறைக்கவும் உதவும்.

தொங்கும் தொப்பையை குறைக்க  "அத்திப்பழ நீர்" தினமும் குடியுங்க..!! அதிசயம் விரவில் நடக்கும்..!!

இயற்கையான முறையில் தலைவலியை எப்படி குறைப்பது?

  • நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • செயற்கை இனிப்புகள் மற்றும் அதிகப்படியான காஃபின் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
  • நட்ஸ், விதைகள் மற்றும் டார்க் சாக்லேட்டில் மெக்னீசியம் உள்ளது, இது தலைவலியைப் போக்க உதவும்.
Follow Us:
Download App:
  • android
  • ios