Chettinad Kara Chutney Recipe : இந்த பதிவில் செட்டிநாடு ஸ்டைலில் காரச் சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய போகிறீங்களா? அப்படியானால் அதற்கு எப்போதும் போல சட்டினி செய்யாமல் ஒரு முறை செட்டிநாடு ஸ்டைலில் கார சட்னி வையுங்கள். செட்டிநாடு உணவு வகைகள் என்றாலே செம டேஸ்டாக இருக்கும் என்று நம் அனைவருக்கும் அறிந்ததே. காரணம் அதன் தனித்துவமான ருசியும் சுவையும் தான். செட்டிநாடு ஸ்டைலில் பல விதமான சட்னிகள் உள்ளன. அவை அனைத்தும் தனித்துவமான டேஸ்டில் இருக்கும். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆகையால், இன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செட்டிநாடு ஸ்டைலில் கார சட்னி வைத்து கொடுங்கள். எவ்வளவு இட்லி தோசை கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் செட்டிநாடு ஸ்டைலில் காரச் சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைலில் சுவையான கொத்தமல்லி சட்னி.. இப்படி செஞ்சு அசத்துங்க..!

செட்டிநாடு ஸ்டைலில் கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2 
தக்காளி - 3
உலர் சிவப்பு மிளகாய் - 15
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு - 15
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தும் பருப்பு - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  10 நிமிடத்தில் டேஸ்டான இஞ்சி சட்னி.. இப்படி ஒரு முறை செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

செய்முறை:
முதலில் ஒரு கடைய அடுப்பில் வைத்து இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதியளவு வெந்தவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பின் கொத்தமல்லி இலை மற்றும் மிளகாய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். எல்லாம் நன்கு வதங்கிய பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைக்கவும்.

இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். நீங்கள் விரும்பினால் பெருங்காயத் தூளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள சட்டினியை அதில் ஊற்றி நன்கு கலக்கவும். அவ்வளவுதான் காரசாரமான சுவையில் செட்டிநாடு ஸ்டைலில் கார சட்னி ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D