Hotel Style Kothamalli Chutney : இந்த கட்டுரையில் ஹோட்டல் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி செய்ய போகிறீர்கள் என்றால், அதற்கு சுவையான சட்னி செய்ய விரும்பினால், ஒரு முறை மல்லி சட்னி செய்து சாப்பிடுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போல் அல்லாமல், ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், சாப்பிடுவதற்கு அருமையாகவும் இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சட்னியை நீங்கள் இட்லிக்கு மட்டுமின்றி, தோசைக்கு கூட வைத்து சாப்பிடலாம். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் ஹோட்டல் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: காரசாரமான ஆந்திரா கார சட்னி.. இட்லி தோசைக்கு வேற லெவல்.. ரெசிபி இதோ..!

மல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
தேங்காய் - 1/4 முடி (பொடியாக நறுக்கியது)
பொட்டுகடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
வரமிளகாய் - 1
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: 10 நிமிடத்தில் டேஸ்டான இஞ்சி சட்னி.. இப்படி ஒரு முறை செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

செய்முறை:
கொத்தமல்லி சட்னி செய்ய முதலில் ஒரு கடைய அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து போட்டு வதக்கவும். பிறகு அதில் வெங்காயத்தையும் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். பிறகு அதில், கழுவி வைத்த கொத்தமல்லி இலையையும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதை அடுப்பில் இருந்து கீழே இறக்கி, ஆற வைக்கவும்.

அவை நன்கு ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒருமுறை அரைக்கவும். பிறகு அதில் பொட்டுகடலை, வதக்கிய வெங்காயம், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த சட்டினியை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்த பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு இதை சட்டினியின் மேல் ஊற்றவும்.அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் ஹோட்டல் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி ரெடி. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்பவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D