Asianet News TamilAsianet News Tamil

சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.. செஃப் தாமு ஸ்பெஷல் தக்காளி சாதம்.. 10 நிமிடம் போதும்..

அனைவரின் ஃபேவரைட் உணவாக இருக்கும் தக்காளி சாதத்தை எப்படி 5 நிமிடத்தில் எளிதாக செய்யலாம் என்பது குறித்து செஃப் தாமு தனது யூ டியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். 

Chef Damu special Tomato Rice Lunch box recipe in tamil Rya
Author
First Published Jun 17, 2024, 6:27 PM IST | Last Updated Jun 17, 2024, 6:27 PM IST

தக்காளி சாதம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவரின் ஃபேவரைட் உணவாக இருக்கும் தக்காளி சாதத்தை எப்படி 5 நிமிடத்தில் எளிதாக செய்யலாம் என்பது குறித்து செஃப் தாமு தனது யூ டியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். 

தேவையான பொருட்கள் :

தக்காளி : 2
வெங்காயம் : 2
பூண்டு பல் : 4
இஞ்சி : சிறிய துண்டு
மிளகாய் தூள் : 2 டீ ஸ்பூன்
தனியா தூள் : 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் : ½ டீஸ்பூன்
மிளகு தூள் : ½ டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு

வெறும் 10 நிமிடத்தில் மொறு மொறு வெங்காய வடை.. இப்படி செஞ்சு அசத்துங்க!

செய்முறை :

அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து கிளறவும். பின்னர் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து தொக்கு பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும். 

அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கிளிறிய உடன், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சுண்டி வரும் வரை மூடி வைக்கவும். பின்னர் அதில் கொத்தமல்லி தழை சேர்த்து கிளற வேண்டும்.

தெருவே மணக்கும் கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு.. ரெசிபி இதோ!

இப்போஅது அடுப்பை அணைத்துவிட்டு வடித்து வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறினால், அவ்வளவு தான் சுவையான தக்காளி சாதம் ரெடி. அப்பளம், வத்தல் அல்லது உருளைக்கிழங்கு வறுவல் அல்லது வேகவைத்த முட்டையை சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios